)
Edappadi Palanisamy Amit Shah Meeting: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (செப். 16) டெல்லிக்கு சென்றார். அங்கு தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் புதிதாக குடியரசுத் துணைத் தலைவராக தேர்வானதை தொடர்ந்து அவரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். அப்படியிருக்க, அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது காரில் இருந்த எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடி சென்றதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகின. அந்த புகைப்படத்தில் எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும் போது வெள்ளை கைக்குட்டையை வைத்து முகத்தை மறைக்கும்படியே இருந்தது.
இபிஎஸ் முகத்தை மூடியபடி சென்றது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஏன் அமித்ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் முகத்தை மூடியபடி செல்ல வேண்டும் என்றும் கேள்விகள் எழுந்தன. முதலில், நிர்வாகிகளுடன் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்தார். அதன்பிறகு நிர்வாகிகளை விடுதிக்கு திரும்பி உள்ளனர், அவர்களுடனேயே போலீசாரும் சென்றுள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமியும் கிளம்பிவிட்டார் என பலரும் நினைத்துள்ளனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்படாமல் அமிஷ்தா இல்லத்திலேயே இருந்துள்ளார். தொடர்ந்து, தமிழும், இந்தியும் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் வரவழைக்கப்பட்டதாகவும், அதன்பின் இபிஎஸ் - அமித்ஷா சிறிது தனியே பேசியதாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகே இபிஎஸ் புறப்பட்டுள்ளார். அப்போதுதான் இந்த முகத்தை மூடிய சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன், அதிமுக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். "டெல்லிக்கு சென்று, மத்திய உள்துறை அமைச்சரை பார்த்து விட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?. அரசியலில் இதுபோல் நடந்து உள்ளதா எந்த கட்சி தலைவராவது டெல்லிக்கு சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து விட்டு வரும்போது முகத்தை மூடிக்கொண்டு ஓடி வருவதை பார்த்து இருக்கிறீர்களா? யார் முகத்தை மூடிக்கொண்டு வருவார்கள் என உங்களுக்கு தெரியும்? என கூறினார்.
ஊடகங்கள் மூலமாகத்தான் நானும் பார்த்து தெரிந்துகொண்டேன். அவரும் அவரது அன்பு மகன் இருவரும்தான் பதில் சொல்ல வேண்டும். மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து விட்டு வந்து முகத்தை மூடிக் கொண்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு என்ன காரணம்? என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். மன்னர்கள் சாதனை செய்தால் இன்று முதல் சாதனை மன்னர் என அழைப்பார்கள். அது போல அண்ணன் பழனிச்சாமியை முகமூடி பழனிச்சாமி என அழைக்க வேண்டும்" என டிடிவி தினகரன் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், அஇஅதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இபிஎஸ் முகத்தை மூடிச்சென்றதாக கூறப்படும் சம்பவத்தை முற்றிலும் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் X பக்கத்தில் போட்ட பதிவில், "எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றாலே பயந்து நடுங்கும் திமுக மற்றும் திமுக ஆதரவு ஊடகங்களுக்கு... முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக Fake Narative செட் பண்ணும் வேலைகள் ஈடுபடும் திமுகவிற்கு...
மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் டெல்லி சென்றாலே பயந்து நடுங்கும் திமுக மற்றும் திமுக ஆதரவு ஊடகங்களுக்கு..
— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) September 17, 2025
முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக Fake Narative செட் பண்ணும் வேலைகள் ஈடுபடும் திமுகவிற்கு..
எடப்பாடியார் ஒன்றும் ஆட்சிக்கு வருவதற்கு முன் கருப்பு balloonனை… pic.twitter.com/x5PW0L1t4N
எடப்பாடி பழனிசாமி ஒன்றும் ஆட்சிக்கு வருவதற்கு முன் கருப்பு பலூனை பறக்க விட்டு; ஆட்சிக்கு வந்த பின் வெள்ளை குடையுடன் செல்லவில்லை... வெளிப்படையாக உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றார் என்பது நாடறியும். சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பின் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் சிறுவர் முதல் கிழவி வரை நடமாட பயப்படும் நிலையை உருவாக்கிய நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். தேர்தல் வருகிற நிலையில் மக்களை எதிர்கொள்ள முடியாமல் நீங்கள்தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். சந்திப்பின் நிகழ்வுகளை எடப்பாடி பழனிசாமி ஊடகங்களை சந்தித்து விவரிக்கும் போது நீங்கள் முகத்தை மறைத்து திருப்பிக் கொண்டுதான் செல்ல வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு குறித்து இன்று காலை போட்ட பதிவில், "இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவருக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அஇஅதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்" என குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து,
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 17, 2025
தேச விடுதலைக்காக பாடுபட்ட
தெய்வத் திருமகனார் பசும்பொன்
ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான… pic.twitter.com/rexu2vDtz0
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ