மல்டி பில்லினியரிடம் 25 லட்சம் லஞ்சம் கேட்டதா சென்னை போலீஸ்...? நடந்தது என்ன?

Chennai Crime News: மனைவி கொடுத்த புகாரில் இருந்து தப்பிக்க வைக்கிறோம் என கூறி சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாக கோடீஸ்வரர் ஒரு புகார் அளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 25, 2025, 06:59 PM IST
  • இதுகுறித்து போலீசார் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
  • காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்.
  • முதலில் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு
மல்டி பில்லினியரிடம் 25 லட்சம் லஞ்சம் கேட்டதா சென்னை போலீஸ்...? நடந்தது என்ன?

Chennai Crime News: அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரசன்னா சங்கர். இந்த நிறுவனத்தின் மதிப்பு 1.16 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவருக்கும் இவரது மனைவி திவ்யா இருவருக்கும் திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது. மேலும் இவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

Chennai Crime News: அமெரிக்காவில் நடக்கும் விவாகரத்து வழக்கு

பெங்களூரிலும் ஐடி நிறுவனம் ஒன்றை அமைத்து நிர்வாகித்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேற்றுமை காரணமாக கணவன் மனைவி இடையே அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் பிரசன்னா சங்கர் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் தங்களது மகனை மாறி மாறி பார்த்துக் கொள்வதாக அமெரிக்க நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர். நான்கு நாட்கள் தாயிடமும் மூன்று நாட்கள் கணவரிடமும் இருக்கும் வகையில் தம்பதியினர் மாறி மாறி மகனை பார்த்து வருகின்றனர்.

Chennai Crime News: மகனை கடத்தியதாக புகார்

இந்நிலையில் பெங்களூரில் ஒரு ஐடி நிறுவனம் ஒன்றை அமைத்து நடத்திக் கொண்டு வருவதால் அது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் பிரசன்னா மற்றும் திவ்யா குழந்தையுடன் சென்னை வந்துள்ளனர். அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மார்ச் மூன்றாம் தேதி, கணவரின் நண்பர் கோகுல் என்பவரிடம் மகனை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. 

அதன் பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு மகனை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியதால் தொடர்ந்து மனைவி திவ்யா கணவன் பிரசன்னாவிடம் கேட்டுள்ளார். மகனை அழைத்துச் சென்ற கணவனின் நண்பர் கோகுலிடம் கேட்கும்போது, கணவர் அழைத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மகனை திருப்பி தராததால்  திருமங்கலம் காவல் நிலையத்தில் மகனை கணவரின் நண்பர் ஆன கோகுல் கடத்தியதாக பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Chennai Crime News: ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்ட சென்னை போலீஸ்?

இந்த புகாரின் அடிப்படையில் பிரசன்னா சங்கரின் நண்பர் கோகுலை போலீசார் பெங்களூரில் பிடித்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது. இது வழக்கு தொடர்பாக பிரசன்னா சங்கர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவரை அனுப்பியதாகவும், அதன் அடிப்படையில் பிரசன்னாவின் வழக்கறிஞரிடம் சென்னை திருமங்கலம் காவல்துறை உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால், வழக்கை தனக்கு சாதகமாக கையாள்வதாக போலீசார் தன்னிடம் கூறியதாக பிரசன்னா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் திடீரென தனது சொத்து மதிப்பின் அளவை தெரிந்துகொண்டு காவல் உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியதாகவும், மேலும் தனது நண்பர் கோகுலை விதிகளை மீறி பெங்களூருக்கு வரை சென்று கைது செய்து வந்ததுள்ளதாகவும் பிரசன்னா சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Chennai Crime News: சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு

பிரசன்னா சங்கர் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மற்றும் புகார்களை முதல்வர் சமூக வலைதள பக்கம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சமூக வலைதள பக்கத்தை இணைத்து தனது X தள பக்கத்தில் புகாராக தெரிவித்துள்ளார்.

Chennai Crime News: போலீசார் தரப்பு கூறுவது என்ன?

முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபரான பிரசன்னா சங்கர் பணம் கொடுத்து இந்த வழக்கில் தனக்கு சாதகமாக முடிக்குமாறு காவல்துறையிடம் கேட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மகனை மீட்டு தாயிடம் ஒப்படைத்ததால் ஆத்திரத்தில் சமூக வலைதளத்தில் இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததாக காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது நண்பர் கோகுல் வீடு திரும்பிவிட்டதாகவும், இதுகுறித்து கைது நடவடிக்கை ஏதும் இல்லை என காவல் ஆணையாளர் உறுதியளித்துவிட்டதாகவும் பிரசன்னா அவரது X தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். நிஜமாகவே கடத்தல் நடந்ததா இல்லையா என்பதை அறிவதற்கு மட்டும் மகனை மட்டும் நீதிமன்ற காவலில் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை கூறியதாக அவர் பதிவிட்டுள்ளார். 

காவல்நிலையத்திற்கு வெளியே அவரது மனைவி செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கும் பிரச்சனா அவரது X தளத்தில் பல்வேறு தொடர்ச்சியான பதிவுகளை இட்டு விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் படிக்க | மாநில சுயாட்சியை காக்க... விரைவில் புதிய அறிவிப்பு - ஸ்டாலின் பேசியது என்ன?

மேலும் படிக்க | செல்வப் பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் தொடர்பு - அதனால்தான் என்கவுன்டர்!

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் சுங்கக்கட்டணம்! எந்த எந்த மாவட்டத்தில் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News