)
Fake News Alert: விடுமுறை தொடர்பாக தற்போது தமிழ்நாடு அரசின் தகவல் சரி பார்ப்பகம் (Fact Check) விளக்கம் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளிகள் அரசு அலுவலகங்களுக்கு நாளை அதாவது ஜூன் ஆறாம் தேதி விடுமுறை என்பது வதந்தி என தற்போது விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜூன் 6 தேசிய பொது விடுமுறையா?
பிரதமர் மோடி, ஜூன் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தேசிய பொது விடுமுறை என அறிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தது.
பொது விடுமுறை என்பது உண்மையா? இல்லையா?
இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியா என பலர் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்பிறகு தமிழக தகவல் சரிபார்ப்பு மையம் களத்தில் இறங்கி உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறது. அதாவது ஜூன் 6 ஆம் தேதி பொது விடுமுறை என்ற செய்தி தவறான தகவல் எனக் கூறியுள்ளது.
தமிழக தகவல் சரிபார்ப்பு மையம் என்ன சொல்கிறது?
தமிழக தகவல் சரிபார்ப்பு மையம் தற்போது தனது இணைய பக்கத்தில் அதற்கு விளக்கம் ஒன்றை வழங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில், இது வதந்தி என்றும், பகிரப்படும் கருத்து தவறானது என்றும் எனக் கூறியுலது. நாளை ஜூன் ஆறாம் தேதி பொது விடுமுறை என்பது முற்றிலும் தவறான செய்தி. அது ஏஐ-யால் உருவாக்கப்பட்ட ஒரு போலியான செய்தி என்றும் கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை என்று பரப்பப்படும் வதந்தி !@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/kxZWqD3e3e
— TN Fact Check (@tn_factcheck) June 5, 2025
பள்ளிகள் மற்றும் வங்கிகள் செயல்படும்
ஜூன் ஆறாம் தேதி வழக்கம் போல பள்ளிகள் மற்றும் வங்கிகள் செயல்படும் என்றும் அறிவித்திருக்கிறது. அதேபோல வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் தகுந்த இடங்களில் மட்டுமே செய்திகள் மற்றும் வரும் தகவல்களை நம்ப வேண்டும் எனவும் தனது இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தகவல் சரி பார்ப்பகம் என்றால் என்ன?
தமிழ்நாடு அரசின் தகவல் சரி பார்ப்பகம் (Fact Check) என்பது, சமூக ஊடகங்கள் மற்றும் செய்திகளில் பரவும் போலியான தகவல்களைக் கண்டறிந்து, உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்கும் ஒரு பிரிவாகும். இது, செய்திகள் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்படுகிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ