Mayiladuthurai DSP Issue: மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி ஆக இருந்த சுந்தரேசன் தனக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டு விட்டதாகக் கூறி, அவரது வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று (ஜூலை 17) நடந்து சென்ற வீடியோ ஊடகங்களில் பரவியது.
Mayiladuthurai DSP Issue: பரபரப்பு கிளப்பிய டிஎஸ்பி
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் திரும்ப பெறப்படவில்லை என்றும் அலுவல் பணி காரணமாக அவரிடம் இருந்து வாங்கிய வாகனத்தை மீண்டும் திரும்ப வழங்கிவிட்டதாகவும் விளக்கம் அளிந்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து டிஎஸ்பி சுந்தரேசன் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னையில் இருந்து உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது மாவட்ட காவல்துறை அழுத்தம் தருவதாக தனது குமுறலை வெளிப்படுத்திருந்தார்.
Mayiladuthurai DSP Issue: டிஎஸ்பி செய்தியாளர்களிடம் பேசியவை என்ன?
மேலும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் டிஎஸ்பி சுந்தரேசன், "என்னை சஸ்பெண்ட் செய்தாலும் பரவாயில்லை, தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை தேவை" என பேசியிருந்தார். மேலும் அவர் பேசியதாவது, "உண்மையை சொல்வதால் என்னை பணியிட நீக்கம் செய்தாலும் கவலை இல்லை. வளைந்து கொடுக்காத அதிகாரிகள் நேர்மையாக இருப்பதற்காக தண்டிக்கப்படுகிறார்கள்" என கொந்தளித்தார்.
மேலும் அவர் உளவு பிரிவு அதிகாரி செந்தில்வேல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தனக்கு வாகனம் அளிக்காத காரணத்தால் இரு சக்கர வாகனத்தில் ரோந்து சுற்றும் நிலைமை உள்ளது என்றும் மாறுதல் பெற்று வந்தபோது தனக்கு நான்கு மாத சம்பளம் அளிக்கவில்லை என்றும் குமுறலை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு இன்னும் போலீஸ் பணி 7 வருடம் இருக்கிறது. ஆனாலும், நான் விருப்ப ஓய்வுக்கு மனு அளித்து உள்ளேன். இன்னும் ஏழு ஆண்டுகள் சர்வீஸ் இருக்கும் நிலையில், என்னை டார்ச்சர் செய்கின்றனர். நான் சஸ்பெண்ட் ஆக வேண்டும் என்றே வேலை செய்கின்றனர். காவல்துறையில் இது ஒழுங்கு நடவடிக்கை உள்ளாகும் தவறு என்று தெரியும் தெரிந்தே தான் பேட்டி அளிக்கிறேன். இதே போன்ற நிலைமை வேறு எந்த அதிகாரிக்கும் வரக்கூடாது" என பேசியிருந்தார்.
Mayiladuthurai DSP Issue: தஞ்சை டிஐஜி ஆய்வு
காவல்துறை நிர்வாகத்தை கண்டித்து டிஎஸ்பி சுந்தரேசன் நேற்று பரபரப்பு பேட்டி அளித்திருந்த நிலையில், தற்போது தஞ்சை மண்டல டிஐஜி ஐயாவுல் ஹாக் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டபோது, 'இந்த கூட்டத்தில் டிஎஸ்பி சுந்தரேசன் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை' என தெரிவித்தனர். மேலும், தன்னிடமும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் டிஎஸ்பி சுந்தரேசனும் விளக்கம் அளித்தார்.
Mayiladuthurai DSP Issue: சுந்தரேசன் சஸ்பெண்டா...?
இந்நிலையில் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று காலை முதல் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய அவர் திருச்சி சரக ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேர்முக ஆய்வாளர் பாலச்சந்தர் கூறுகையில்
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. டிஎஸ்பிஐ சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்திருப்பதாக தகவல் பொய்யானது. தஞ்சை மண்டல டி.ஐ.ஜி ஐயாவுல் ஹாக் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் இறுதியில் முடிவுகள் செய்தி அறிக்கை வெளியாகும்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | கிட்னி திருடும் கும்பலால் அதிர்ச்சி! மா.சு சொன்ன விஷயம்..! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம்: "விரைவில் நல்ல முடிவு வரும்".. அமைச்சர் ஐ.பெரியசாமி!
மேலும் படிக்க | திமுக தேர்தல் வாக்குறுதி.. தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்! ஏன்? எதற்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









