)
பாமகவில் மருத்துவர் ராமதாசிற்கும், அன்புமணிக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்கு காரணமாக பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிவித்திருந்தார். ஆனால் பாமகவின் தலைவராக தொடர்ந்து அன்புமணியே செயல்படுவார் என்றும் பாமகவின் தலைவராக அன்புமணியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் அன்புமணி தரப்பினர் தெரிவித்தனர். இதனால் மருத்துவர் ராமதாசிற்கும், அன்புமணிக்கும் இடையே பாமக யாருக்கு சொந்தம் என்கிற போட்டி நிலவி வருகிறது. இதற்காக மருத்துவர் ராமதாஸ் தரப்பும், அன்புமணி தரப்பும் தனித்தனியாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனர்.
இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாமகவின் உயர்மட்ட நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அருள், வன்னியர் சங்க மாநில செயலாளர் பு.தா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இரண்டு
இனி வரும் காலங்களில் கட்சியின் செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தலில் கூட்டணி, ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசை நடைபெற்றது. கூட்டணி அமைக்க ராமதாசுக்கு நிர்வாக குழு, செயற்குழு, பொதுக்குழுவால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியை ராம்தாஸ் முடிவு செய்வார். அடுத்த மூன்று மாதங்களுக்கு செய்யப்பட வேண்டிய திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கபப்ட்டது. பாமக தொண்டர்கள் குதித்து கொண்டாடும் கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். கூட்டணி கட்சி தலைவர் விரைவில் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாசை சந்திப்பார். அன்புமணி தரப்பில் தலைவர் பதவி ஓராண்டுக்கு நீடித்து கேட்கப்பட்ட கடித்தத்தை பதிவு செய்துள்ளோம், ஆனால் அங்கரிக்கவில்லை என தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.
பீகார் தேர்தலில் பாமக போட்டியிடப்போகிறது என தேர்தல் ஆணையத்திடம் பொய் சொல்லபப்ட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியை தவிர வேறு மாநிலத்தில் கட்சி இல்லை. ஆனால் பீகார் தேர்தலில் போட்டியிடப்போவதாக பொய் கூறியுள்ளனர். முகவரி மாற்றம் பொய்யானது என தேர்தல் ஆனையத்திடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது, அன்புமணி நீக்கப்பட்டது குறித்த தகவலை தேர்தல் ஆனையத்திடம் கூறியுள்ளோம். தேர்தல் ஆனையம் சரியாக செயல்படும் என நம்புகிறோம். அன்புமணி தரப்பு கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கின்றனர். மருத்துவர் ராமதாஸ் இல்லாமல் பாமக ஓட்டை பெற முடியாது. பாமக தலைவராக அன்புமணி தேர்தல் ஆணையம் எங்கும் கூறவில்லை. தேர்தல் ஆணையம் தவறு செய்யாது என நம்புகிறோம். அப்படி தவறு செய்தால் அதனையும் சந்திப்போம். அடுத்த வாரம் மீண்டும் டெல்லி செல்லவுள்ளேன். கூட்டணி கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும் தைலாபுரம் வந்து சந்தித்தது தான் வழக்கம். கூட்டணி பேச்சுவார்த்தை தைலாபுரத்தில் தான் நடக்கும். மருத்துவர் ராமதாஸ் கை காட்டுபவரே அவர் தான் முதல்வர்.
பாமகவின் தலைமை செய்தி தொடர்பாளராக சேலம் சட்டமன்ற உறுப்பினரும், இணைப்பொது செயலாளருமான அருள் நியமித்து மருத்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ