பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று (மே 16) 10ஆம் வகுப்பு மற்றும் +1 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டபிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கோடை வெயில் என்பதால் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகுமா என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாம் ஏற்கனவே அறிவித்தபடி கோடை விடுமுறை முடிந்த உடன் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இப்போது வரை அந்த முடிவில்தான் இருக்கிறோம். இதற்காக தனித்துறையே இருக்கிறது. அவர்கள் பள்ளி திறப்பின்போது, வெயிலின் தாக்கத்தை கணக்கிட்டு கூறுவார்கள். அதன்படி பள்ளிகள் திறப்பு இருக்கும்.
விழுப்புரம் செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் 100க்கும் மேற்பட்டோர் வேதியியலில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ள விவகாரத்தில், மாணவர்கள் 100 மதிப்பெண் எடுத்ததையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களையும் பாராட்டாமல், ஏன் சந்தேகப்படுகிறீர்கள். அந்த மையத்தில் கடந்த ஆண்டில் 91 முதல் 99 மதிப்பெண்களை 104 பேர் எடுத்திருந்தார்கள். இதில் வினாத்தாள் கசிந்ததா? தேர்வு அறையில் வேதியியல் பாடம் சார்ந்த ஆசிரியர்கள் பணியில் இருந்தார்களா? என்பது உள்ளிட்ட முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு இர்ருக்கிறது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் அரசு நிதியுதவி மூலம் படிக்க வைக்கப்படுகிறார்கள். அதற்கான நிதியாக ரூ.617 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதுபற்றி தலைமை செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை.
இதனையடுத்து நமது மாநில பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரும் டெல்லி சென்று இருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்ததும், இந்த ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் செயல்படுத்தும் திட்டம் குறித்த அறிவிப்பை தெரிவிப்போம் இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
மேலும் படிங்க: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு ஜில் நியூஸ்!
மேலும் படிங்க: பிஎம் கிசான் தொகை வேண்டுமா? விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு போட்ட முக்கிய உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ