தவெக வேட்பாளர் இன்று அறிவிப்பா...? புஸ்ஸி ஆனந்த் சொன்ன முக்கிய தகவல்...!

TVK Latest News Updates: தவெகவின் முதல் வேட்பாளராக அருண்குமார் ஐஆர்எஸ் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 14, 2025, 01:32 PM IST
  • திருச்செங்கோட்டில் இன்று தவெக ஆலோசனை கூட்டம்
  • செங்கோட்டையன் இன்று கூட்டத்தில் பங்கேற்றார்.
  • டிச. 18இல் விஜய் சுற்றுப்பயணம் தொடங்குகிறது.
தவெக வேட்பாளர் இன்று அறிவிப்பா...? புஸ்ஸி ஆனந்த் சொன்ன முக்கிய தகவல்...!

TVK Latest News Updates: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Add Zee News as a Preferred Source

TVK: திருச்செங்கோட்டில் ஆலோசனை கூட்டம்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருள்ராஜ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். அவர்கள் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். திருச்செங்கோடு வேலவர் அர்த்தநாரீஸ்வரர் தெய்வங்களை வழிபட்டனர்.

தொடர்ந்து திருச்செங்கோடு ஆனங்கூர் சாலையில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களப்பணி மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து ராசிபுரம் பகுதியில் மலைவாழ் மக்களுக்காக புதிய ஆம்புலன்ஸ் வழங்குதல் மற்றும் நலத்திட்ட பணிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

TVK: இன்று தவெக வேட்பாளர் அறிவிப்பா?

இந்தச் சூழலில், திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் தவெக வேட்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் தேர்வாகி இருக்கிறார் என்றும் அவரை இன்று தவெக தலைமை வேட்பாளராக அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவின. இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

TVK: சரியான வேட்பாளர்

இதுகுறித்து திருச்செங்கோட்டில் பேசிய அவர், "வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் மட்டுமே அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை" என்றார். மேலும் அவர், "தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் விஜய்யால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களை விஜய் களமிறக்குவார். அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம்" என தொண்டர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

TVK: விருப்பப் மனு எப்போது?

பொங்கல் பண்டிகைக்கு பின்னர், தவெகவில் விஜய் தலைமையில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இந்தச் சூழலில், தவெகவில் விருப்ப மனு பெறும் தேதி குறித்தும் விஜய் அறிவிப்பார் என்றும் திருச்செங்கோட்டில் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

TVK: தவெகவுக்கு போட்டி இல்லை...

திருச்செங்கோட்டில் பேசிய செங்கோட்டையன், "அதிமுகவில் இருந்து மட்டுமில்லை, திமுகவில் இருந்தும் தவெகவில் இணைகிறார்கள். NDA கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என  யாராலும் ஊகிக்க முடியாது, பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். தவெகவிற்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. மக்கள் சக்தி இருக்கிறது.போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும்சொல்ல முடியாது, மக்கள் சக்தியால் விஜய் முதல்வர் ஆவார்" என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கரூர் சம்பவத்திற்கு பின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நிறுத்திய விஜய், சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு வரும் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் அவரது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அதிமுக உடன் கூட்டணி இல்லை...? - தவெக நிறைவேற்றிய 4 தீர்மானங்கள் என்னென்ன?

மேலும் படிக்க | TVK VIJAY: புதுச்சேரி மக்கள் சந்திப்பு முடிந்ததும் விஜய் எடுத்த அவசர முடிவு!

மேலும் படிக்க | தவெகவை விமர்சித்த பாஜகவின் ஜே.பி. நட்டா... செங்கோட்டையன் கொடுத்த பதிலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News