Kalaingar Magalir Urimai Thogai: தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதேநேரம் கடந்த டிசம்பர் 12, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதில் சுமார் 1,69,4339 பெண்கள் புதிதாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,30,69,831 பெண்கள் மாதம் ரூ.1000 உரிமைத் தொகையைப் பெற்று வருகின்றனர்.
மகளிர் உரிமை தொகை உயர்த்தப்படுகிறதா?
விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், பெண்களில் வாக்குகளை திமுக கூட்டணிக்கு முழுவதுமாக வர வேண்டும் என்ற நோக்கில், திமுக அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகையை உயர்த்தப் போகிறது எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
மகளிர் உரிமை தொகை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன முக்கிய அப்டேட்
இந்தநிலையில் தான் அமைச்சர் ஐ.பெரியசாமி, 'பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பெண்களுக்கு ஒரு சிறப்பு பொங்கல் பரிசு காத்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்கள். அதாவது இதுக்குறித்து பெண்கள் மத்தியில் அமைச்சர் பேசும் போது, 'பொங்கல் அன்றோ அல்லது பொங்கல் முடிவதற்குள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு ஒரு தித்திப்பான அறிவிப்பை வெளியிடுவார். பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
பெண்களுக்கு காத்திருக்கும் பொங்கல் பரிசு -அமைச்சர்
அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த தகவலின்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமைத்தொகையை திமுக அரசு அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான் இதை பொங்கல் பரிசு என சூசகமாக அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார் எனக் கூறப்படுகிறது.
மகளீர் உரிமைத்தொகை திட்டம் வாக்கு வங்கி
வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக கையில் இருக்கிற முக்கியமான ஆயுதமே இந்த மகளீர் உரிமைத்தொகை திட்டம் தான் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதால், இதை வைத்து பெண்களின் வாக்குகளை முழுசா அறுவடை செய்ய திமுக திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
மகளிர் உரிமை தொகை எவ்வளவு உயர்த்தப்படும்?
அதனால் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை ரூ.1500 ஆகவோ அல்லது ரூ.2000 ஆகவோ உயர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தான் அமைச்சர் ஐ.பெரியசாமி பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என மறைமுகமாக கூறியிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
மகளிர் உரிமை தொகை அதிகரிப்பு எப்பொழுது?
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உதவித்தொகை ரூபாய் உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது பொங்கல் அல்லது வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. ஒருவேளை உரிமைத் தொகையை அதிகரிக்கப்பட்டால், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கணிசமாக இடங்களில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம் எதிர்கட்சிகளுக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 vs மகளிர் உரிமை தொகை
எதுவாக இருந்தாலும் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 044-25619208 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
ஜனவரி 2026 மகளீர் உரிமைத்தொகை தவணை
தமிழகத்தை பொருத்த வரை பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் மகளீர் உரிமைத்தொகை பணம் வரவு வைக்கப்படும். ஆனால் இந்தமுறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயனாளிகளுக்கு முன்கூட்டியே ஜனவரி 9 ஆம் தேதி முதல் உரிமைத்தொகை பணத்தை வழங்க வேண்டும் என ம் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் பொங்கல் பண்டிகை செலவுகளுக்கு இந்தப் பணம் பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : முதலமைச்சரின் புதிய அறிவிப்பு வரப்போவது எப்போது?
மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான 5 முக்கிய காரணங்கள்
மேலும் படிக்க - பொங்கல் விடுமுறை ஐந்து நாட்கள் கிடைக்குமா? மக்கள் கோரிக்கை.. தமிழக அரசு தீவிர ஆலோசனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









