Tamil Nadu Government Widow Pension Scheme: தமிழக அரசு பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் நலனில் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டம் தமிழக அரசு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்
கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கைம்பெண்களுக்கு நிதியுதவி அளித்து ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு மாதற்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க எந்த ஒரு கால அவகாசமும் கிடையாது.
தகுதிகள் என்னென்ன?
தமிழக அரசின் ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விதவையாகவோ, கணவரை பிரிந்தவராகவோ இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும். அசையா சொத்து ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பெண்ணுக்கு மகன், மகள் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். எந்த ஒரு அரசு வேலையிலும் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ.1,000 கிடைக்கும்
தமிழக அரசின் இந்த திட்டம் மூலம் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகையை தபால் நிலையம் மூலமாகவும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகை பெண்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய உதவும். எனவே, ரூ.1,000 உதவித் தொகை பெற, தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற பிறிகு, அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பத்துக்கு ஒப்பதல் அளிக்கப்பட்ட 30 நாளில், அடுத்த மாதம் முதல் உங்களுடைய வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும். மேலும், இந்த திட்டத்திற்கு TNesevai இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு தேவயைன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை, சுய அறிவிப்பு பத்திரம், ரேஷன் கார்டு ஆகியவற்றை இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









