Jana Nayagan Movie Leak Latest: விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையதளத்தில் கசிந்துள்ளது பெரும் சர்ச்சையை வெடித்துள்ளது. இதற்கு தற்போது தவெக தரப்பில் இருந்து கண்டனங்களும் எழுந்துள்ளது. அதாவது, தவெகவின் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.

Jana Nayagan Movie Leak Latest: விஜயின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாக இருந்தது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தில் கேவிஎம் தயாரித்துள்ளது. இந்த விஜய்யின் கடைசி படமாக இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாக வேண்டி இருந்தது.
இப்போது வரை இந்த படம் வெளியாகாமல் இருக்கிறது. இதற்கு காரணம் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதர் தராதது தான். இது சம்பந்தமான வழக்கும் நீதிமன்றத்தில் ஒரு மாதமாக நடந்த நிலையில், கடைசியில் கேவிஎம் நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றது. இதனை அடுத்து, சென்சார் குழு மீண்டும் படத்தை பார்த்து சென்சார் சான்றிதழை வழங்கியுள்ளது.
ஆனால், இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதுவும் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஜனநாயகன் படம் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், மே மாதம் தான் படம் ரீலிஸாகும் என கூறப்பட்டது. ஆனால், அதற்குள்ளே நேற்று இரவோடு இரவாக முழு படமே இணையதளத்தில் கசிந்தது. முதலில் 2 நிமிட காட்சிகள் மட்டுமே வெளியான நிலையில், அடுத்தடுத்து முழு படமும் இணையத்தில் வெளியானது.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த வேலையை யார் பார்த்தார் என்ற கேள்விகளை எழுந்துள்ளது. இணையத்தில் கசிந்துள்ள சில வீடியோக்களில் எடிட் வாட்டர் மார்க் இருக்கிறது. இந்த எடிட் மார்க் இருக்கும் காட்சிகள் நடிகர், எடிட்டர், தயாரிப்பாளரிடம் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே, அவர்களது குழுவில் இருப்பவர்கள் தான் ஜனநாயகன் பட காட்சிகளை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படம் முழுவதும் இணையதளத்தில் கசிந்ததற்கு தவெக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்து தவெகவின் ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான விஜய்க்கான மிரட்டல். ஜனநாயகன் படத்தை நிறுத்த பாஜக எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தது என தெரியும். உயர் நீதிமன்ற நீதிபதி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுத்து படத்தை வெளியிட வேண்டும் வேண்டும் உத்தரவிட்டது. இந்த உத்தரவிட்ட இரண்டு மணி நேரத்தில் பாஜக அரசு உடனே உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. இதற்கு மத்திய அமைச்சராக இருப்பவர் எல்.முருகன் பின்புலமாக இருக்கிறார்.
மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய எல்.முருகன், படத்தை நிறுத்தி அதிமுக உதவ வேண்டும் என்ற நோக்கில் அனைத்து விதத்திலும் அழுத்தம் கொடுத்தார். எல்.முருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சேர்ந்து தான் ஜனநாயகன் படத்தை வெளியட அனுமதிக்கவில்லை. இதற்கு டெல்லியில் இருக்கக் கூடிய பாஜக தலைவர்களும் உதவி செய்தார்கள்.
அதனால், தான் இன்றைக்கும் ஜனநாயகன் படம் வெளியாகிவில்லை. எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாக்கு பராசக்தி படக்குழுவை அனுப்பி வைத்தது உதயநிதி தான். அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கும். பாஜகவுடன் ஆதரவோடு தான் திமுகவின் ஸ்டாலின், உதயநிதி செயல்பட்டு வருகிறார்கள். பாஜக, திமுக, அதிமுக மூன்று கட்சிகளும் சேர்ந்து, புதிதாக வரக்கூடிய தலைவர்களுக்கு அதிகளவில் அழுத்தம் கொடுக்கின்றனர். திமுகவினர் எம்ஜிஆருக்கு இதேபோன்று நெருக்கடிகளை கொடுத்தனர்" என்று கூறினார்., இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனால், அக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஜனநாயகம் லீக்கானது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் படத்தின் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கேவிஎம் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் பதிவிறக்கம் செய்யவோ, சேமிக்கவோ அனுப்பவோ கூடாது என தெரிவித்துள்ளது.
மேலும் கூறுகையில், ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
ஜனநாயகன் லீக் விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம், இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து திருட்டை தவிர்க்கவும். திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கேயே பார்க்கவும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையாளர்களை மதியுங்கள். கடின உழைப்பை மதியுங்கள். இந்தத் துறையை மதியுங்கள்" என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ