சென்னை பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு - தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Tamilnadu Government Job: சென்னையில் உள்ள பெண்கள் உதவி மையம்த்தில் தொகுப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடத்துக்கான தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 30, 2025, 02:00 PM IST
  • தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • சென்னையில் பெண்கள் உதவி மையத்தில் வேலை
  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது? தெரிந்து கொள்ளுங்கள்
சென்னை பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு - தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Tamilnadu Government Job Recruitment Chennai : சென்னை மாவட்ட ஆட்சியர் பெண்கள் உதவி மையம்த்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த காலிப் பணியிடத்துக்கு கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC- Chennai A), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி. ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சேவை மையம். வட சென்னை-க்கான தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்காக கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வழக்கு பணியாளர்கள் (Case worker)(காலி பணியிடங்கள் 3)

சமூகப் பணியில் இளங்கலை பட்டம்(Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர்(Counseling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் ஒரு வருட முன் அனுபவம் உடையவராகவும் உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். 

வயது35க்குள் இருக்க வேண்டும். உள்ளுறை சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகன ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மாத ஊதியம் ரூபாய் Rs:18000/-ஆகும். மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 05.05.2025 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 01 என்ற முகவரியில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் மற்றும் oscnorthchennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான படிவம் ; (இணைப்பை கிளிக் செய்யவும்)

அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு (இந்த இணைப்பை கிளிக் செய்யவும்)

மேலும் படிக்க | காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம்... ஸ்டாலின் அதிரடி - என்ன காரணம்?

மேலும் படிக்க | ரயில்வே, வங்கி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News