)
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு ஒரு அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு ஏதுமின்றி, மதிப்பெண்கள் அடிப்படையில் 1589 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, சேலம், திருநெல்வேலி மண்டலங்கள், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) ஆகியவற்றில் காலியாக உள்ள இந்த பணியிடங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate Engineering Apprentices) - காலியிடங்கள்: 459
கல்வித் தகுதி: தொடர்புடைய பொறியியல் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி ஊக்கத்தொகை: மாதம் ரூ.9,000
பட்டய பயிற்சி (Technician Diploma Apprentices) - காலியிடங்கள்: 561
கல்வித் தகுதி: தொடர்புடைய பொறியியல் பிரிவில் டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி ஊக்கத்தொகை: மாதம் ரூ.8,000
பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices - Arts & Science) - காலியிடங்கள்: 569
கல்வித் தகுதி: B.A., B.Sc., B.Com., BBA, BCA, அல்லது BBM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி ஊக்கத்தொகை: மாதம் ரூ.9,000
இந்த பணியிடங்களுக்கு எந்தவித எழுத்து தேர்வும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் தங்களது பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படும்.
விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், பின்வரும் படிகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம். முதலில், தேசிய பயிற்சித் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nats.education.gov.in என்பதில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பிறகு, அதே இணையதளத்தில் உள்நுழைந்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக மண்டலத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் அக்டோபர் 18 ஆகும். தேர்வு இல்லாத இந்த அருமையான வாய்ப்பை, தகுதியுள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு, தமிழக அரசு பணியில் இணைவதற்கான முதல் படியை எடுத்து வைக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ