)
தமிழ் வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில் காலியாக உள்ள பதிப்பாசிரியர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ், இரண்டு விதமான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

1. பதிப்பாசிரியர் (Editor)
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, மாதம் ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம் (M.A. Tamil) பெற்றிருப்பதுடன், ஆய்வு படிப்புகளான எம்.பில் (M.Phil) அல்லது பிஎச்.டி (Ph.D) பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி ஆய்வு மற்றும் பதிப்பு பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2. அலுவலக உதவியாளர் (Office Assistant)
இந்த பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, மாதம் ரூ. 15,900 முதல் ரூ. 50,400 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை, தேவையான கல்வி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
இயக்குநர்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்,
முதல் தளம், தமிழ் வளர்ச்சி வளாகம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை - 600008.
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை அனுப்பும் தபால் உறையின் மீது, தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் வயது வரம்பு போன்ற கூடுதல் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்த்து கொள்ளுங்கள். தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசு பணியில் சேரலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ