)
Indian Army jobs : இளம் வயதில் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் ராணுவம், விமானப்படையில் சேர விருப்பம் இருக்கும். ஆனால், என்ன செய்ய வேண்டும்?, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என தகவல் தெரியாமல் இருக்கும். அவர்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பு தான் இது. இந்திய ராணுவத்தில் அக்னிவீர் மற்றும் அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இளம் வயதினரை ராணுவத்தில் சேர்ப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் கலந்து கொள்ளுங்கள்
விமானப்படை வேலை வாய்ப்பு
இந்திய விமானப்படையினால் Indian Air Force (OS) Trade பணிக்காக திறந்தநிலை ஆள்சேர்க்கை கூடுகை வரும் 02.09.2025 (ஆண்) மற்றும் 05.09.2025 (பெண்) ஆகிய நாட்களில் எண். 8ASC. Air Force Station, Tambaram, Chennai 46 என்ற முகவரியில் நடத்தப்பட உள்ளது.
கூடுகை இடம் மற்றும் விவரங்கள்
-
1) இடம் - No. 8 ASC, Air Force Station Tambaram, Chennai - 600 046
2) அடையாளம் - Air Force சாலை
3) அருகாமையில் உள்ள பேருந்து அல்லது இரயில் நிறுத்தம் - தாம்பரம் (East Exit)
4) நாள் - 02 Sep 0400h onwards (Male) 05 Sep 0500h onwards (Female)
5) கல்வித்தகுதி –12 ஆம் வகுப்பு / அதற்கு சமமான (ஏதேனும் ஒரு பிரிவு) 50% மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்கள்
6) வயது – 17 வயது 6 மாதம் வயதிற்கு மேல் 26.01.2026 அன்று 21 வயதுக்கு குறைவு
7) Instagram handle/ Id: 8airmenselection
இதுகுறித்த மேல்விவரங்கள் www.agnipathvayu.cdac.in என்ற வலைதளத்தில் பெற்றுக்கொள்ள இயலும்.
அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர பயிற்சி
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அக்னிவீர் தேர்வில் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், " இந்திய இராணுவத்தின் அக்னி வீர் தேர்வில் முதல் கட்ட தகுதித்தேர்வில் வெற்றி பெற்றுள்ள நாகப்பட்டினம் மாவட்ட பணி நாடுபவர்களை மாவட்ட நிர்வாகம் வாழ்த்துகிறது. முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள இளைஞர்களுக்கு அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள உடல்திறன் தேர்வுக்கு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளது.
உடல்திறன் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் பயிற்சிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த ஆயத்தக்கூட்டம் 05.08.2025 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கில் உரிய பயிற்றுநர்களால் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்வில் வெற்றிபெற்றுள்ள பணிநாடுபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அக்னிவீர படையில் சேர்விற்கு எந்த வித கையூட்டும் எவரிடமும் தரவேண்டாமெனவும், இடைத்தரகர்கள் எவரையும் நம்பி ஏமாற வேண்டாமெனவும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது." என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ