தவெக-வின் சகுனி.. ’ஸ்லீப்பர் செல்’ ஆக செயல்படும் ஆதவ் அர்ஜுனா.. விஜய்யை எச்சரிக்கும் உறவினர்!

TVK Aadhav Arjuna: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்த ஜோஸ் மார்ட்டின், அவர் திமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’ (Sleeper Cell) என கூறி இருக்கிறார்.   

Written by - R Balaji | Last Updated : Mar 13, 2026, 12:45 PM IST
  • தமிழக வெற்றி கழக கட்சியின் முக்கிய பொறுப்பில் ஆதவ் அர்ஜுனார் இருக்கிறார்
  • இவர் தவெகவில் இணைவதற்கு முன்பாக விசிக-வில் இருந்தார்.
  • 2019, 2021ஆம் ஆண்டு தேர்தல்களில் திமுகவிற்காக தேர்தல் வேலைகள் பார்த்தார்
தவெக-வின் சகுனி.. ’ஸ்லீப்பர் செல்’ ஆக செயல்படும் ஆதவ் அர்ஜுனா.. விஜய்யை எச்சரிக்கும் உறவினர்!

Jose Charles Martin Attacks aadhav arjuna: பிரபல நடிகராக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணித்து வரும் அவர், புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை முழுமையாக நம்புகிறார். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா விஜய்யின் வலது கரமாக இருந்து வருகிறார். அவருக்கு அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை குழு பொதுச்செயலாளர் என்ற பெரிய பொறுப்பை கொடுத்து கட்சியின் பிரதான வேலைகளை செய்ய சொல்லி இருக்கிறார் . 

Add Zee News as a Preferred Source

அதவ் அர்ஜுனா மீது ஜோஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு 

இந்த நிலையில், விஜய்யின் நம்பகமான ஆளாக பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லீப்பர் செல் என அவரது மைத்துனரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம் சாட்டி இருக்கிறார். அதேபோல், கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு பின்னால் அதவ் அர்ஜுனாவின் வேலை இருப்பதாகவும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

கூட்டணிக்கு முட்டுக்கட்டை போடுவதே ஆதவ் தான்

இது தொடர்பாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது எக்ஸ் பக்கத்தில், அன்புள்ள விஜய், ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது முதல், உங்கள் நலன் விரும்பியாக நான் ஒரு உண்மையை உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தவெக-வுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முடியாமல் முட்டுக்கட்டை போடுவது ஆதவ் அர்ஜூனாதான். இதற்கு பின்னால் அவருடைய சுயநலமும், அதிகார பசியும் மட்டுமே இருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லீப்பர் செல் (Sleeper Cell)

திமுகவின் ஒரு முக்கிய புள்ளியால், உங்களையும் உங்கள் கட்சியையும் வேரோடு அழிப்பதற்காக அனுப்பப்பட்ட ‘Sleeper Cell’ தான் இந்த ஆதவ் அர்ஜூனா. தவெக-விற்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவைத் திசைமாற்றி, அதை எதிரணிக்குச் சாதகமாக்கும் சதிவேலைகளை அவர் மிகக் கச்சிதமாக செய்து வருகிறார்.

கரூர் சம்பவத்திற்கு சகுனியாக காய் நகர்த்தியவர்

அதன் ஒரு பகுதிதான் கரூர் துயர சம்பவம். 41 அப்பாவி உயிர்கள் பறிபோன அந்த கோர சம்பவத்திற்கு பின்னணியில் ‘சகுனியாக’ இருந்து காய் நகர்த்தியவர் இவர் தான். சிபிஐ விசாரணையில் இவரது முகத்திரை கிழியும் என்பது உறுதி. அன்று செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து சென்றதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்பதை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறேன்.

அதவ் அர்ஜுனாவை அப்புறப்படுத்திய திருமாவளவன் 

செல்லும் இடமெல்லாம் தன்னைத் தானே தலைவனாக கட்டமைக்க முயல்வது இவரது வழக்கம். இதையுணர்ந்தே திருமாவளவன் அவர்கள் இவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தினார்.

என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்—எங்கள் குடும்பத்தைப் பிரிக்க முயன்றது போல, உங்கள் குடும்பத்தையும் அரசியலையும் சிதைக்க அவர் தயங்கமாட்டார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என துடிக்கும் உங்கள் பயணத்திற்கு, நான் ஒரு நலம் விரும்பியாகச் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்... உங்கள் பாதை தெளிவாக இருக்கலாம். 

வெற்றி பாதை முடங்கும் அபாயம் உள்ளது 

ஆனால் பயணிக்க வேண்டிய தடம் வழுக்கலாக இருக்கிறது. கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காண தவறினால், உங்கள் வெற்றி பாதியிலேயே முடங்கிப்போகும் அபாயம் உண்டு. காலத்தே எடுக்கும் துணிச்சலான முடிவே கழகத்தின் எதிர்காலத்தை காக்கும். விழிப்புடன் இருங்கள், வெற்றிக்கான பாதையை சீர் செய்யுங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தவெகவிற்கு முன் விசிக, திமுக பயணம் 

ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு முன்னர் திமுகவிற்காக 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் பணிகள் மேற்கொண்டார் என்றும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுபாடு.. ஹோட்டல்களில் உணவு வகைகளின் விலை உயர்வு!

மேலும் படிக்க: யார் இந்த காளிம்மாள்? இபிஎஸ் கொடுக்கும் முக்கிய பொறுப்பு.. மயிலாடுதுறையில் போட்டி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News