நித்தியானந்தா இறந்துவிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Nithyananda Died: நித்தியானந்தா இறந்துவிட்டதாக தற்போது சமூக ஊடகங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இதனை அவரது சித்தியின் மகன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2025, 10:35 AM IST
  • நித்தியானந்தா மரணமா?
  • வெளியான அதிர்ச்சி தகவல்!
  • அவரது சித்தி மகன் தகவல்.
நித்தியானந்தா இறந்துவிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Nithyananda Died: எப்போதும் சர்ச்சையில் சிக்கும் சாமியார்களில் ஒருவரான நித்தியானந்தா தற்போது இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது சமூக ஊடகங்கள் மூலியமாக மக்களை சந்தித்து வரும் இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. நித்தியானந்தாவின் சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் இந்த தகவலை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

யார் இந்த நித்யானந்தா?

தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் நபராக நித்யானந்தா இருக்கிறார். ஆன்மீக மற்றும் ஊழல் ஆகியவற்றின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நித்தியானந்தா. அவரது ஏராளமான ஆசிரமங்கள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளுக்காக புகழ்பெற்ற அவர், பல்வேறு தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கினார். நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி அவரது பெயரை கெடுத்தது. பின்னர் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறைக்கு சென்றார். நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும், நடிகை ரஞ்சிதாவுடனான அவரது சர்ச்சைக்குரிய ஈடுபாடு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது.

பாலியல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் இருந்ததால், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பின்னர் இந்து மக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை நிறுவுவதாக அறிவித்தார். அந்த நாட்டிற்கு தன்னைத்தானே ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டு, அங்கிருந்து ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். ஈக்வடாரில் உள்ள ஒரு தீவை வாங்கி கைலாசா என்று பெயர் வைத்து அந்த நாட்டிற்கென தனி நாணயம், கொடி மற்றும் ஸ்டாம்ப் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். இதுபோன்ற அவரது செயல்பாடுகளையே உலகமே பார்த்துக்கொண்டிருக்கையில், நித்யானந்தாவின் உடல்நிலை குறித்த அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின.

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோமாவில் இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் பரவியது. ஆனால் சிறிது நேரத்திலேயே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ மூலம் சொற்பொழிவுகளை வழங்க தொடங்கினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க நித்தியானந்தா இவ்வாறு பொய்யான தகவலை பரப்பலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிங்க: 2026-ல் தமிழக முதல்வர் ஆவது யார்? சி வோட்டர் கணக்கெடுப்பில் மக்கள் சொன்ன பெயர்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News