கலைஞர் கனவு இல்லம்: புது வீடு கட்டுபவர்களுக்கு முதலமைச்சர் கொடுத்த குட்நியூஸ்

Kalaignar Kanavu Illam : கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்த முக்கிய அப்டேட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கொடுத்துள்ளார்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jan 22, 2026, 01:52 PM IST
  • கலைஞர் கனவு இல்லம் அப்டேட்
  • இந்த ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் கனவு இல்லம்: புது வீடு கட்டுபவர்களுக்கு முதலமைச்சர் கொடுத்த குட்நியூஸ்

Kalaignar Kanavu Illam : தமிழ்நாட்டில் புது வீடு கட்ட திட்டமிடுபவர்களுக்கு ஒரு சூப்பரான குட்நியூஸ் வெளியாகியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஏற்கனவே ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு லட்சம் வீடுகள் இந்த ஆண்டு கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார். எனவே, புது வீடு கட்டும் திட்டத்தில் இருக்கும் ஏழை எளிய மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

கலைஞர் கனவு இல்லம் திட்டம்

குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக "கலைஞர் கனவு இல்லம்" எனும் திட்டம் அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2024-25-ஆம் நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே மாநில அரசால் நடத்தப்பட்டுள்ள கலைஞர் வீடு வழங்கும் திட்ட மறுகணக்கெடுப்பு. புதிய குடிசைகள் கணக்கெடுப்பு மற்றும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு ஆகியவற்றில் இடம்பெற்று தொடர்ந்து குடிசை வீட்டில் வாழ்ந்து வருபவர்கள் இத்திட்டத்தில் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும். சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதியானவர்கள்.

* சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள் தகுதியற்றவர்கள். குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு இருந்தால் தகுதி பெறமுடியாது.

* இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் அலகுத் தொகை ரூ.3,50.000/- (ரூபாய் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) ஆகும். மேலும் மூன்று நிலைகளில் ஒற்றை சாரள கணக்கு மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தொகை வரவு வைக்கப்படும்.

* ஏற்கனவே அரசால் மேற்கொள்ளப்பட்ட மூன்று வகை கணக்கெடுப்பிலும் விடுபட்ட குடிசையில் வசிப்பவர்கள் இத்திட்டத்தின்கீழ் வீடு வழங்கிடக் கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 

* அவர்களது விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட்டு இந்த ஆண்டில் விண்ணப்பதாரர் வசிக்கும் மாவட்டத்திற்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு தேவையான சிமெண்ட், அரசு நிறுவனமான TANCEM வழியாகவே விநியோகம் செய்யப்படும். ஏனென்றால், பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதவிர இரும்பு கம்பிகளும் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். 

யாருக்கு வீடு கிடைக்காது?

புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது. சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி வீடு கட்ட கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி வழங்கப்படும். ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | கலைஞர் கனவு இல்லம் திட்டம் : சொந்த வீடு கட்டுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | கலைஞரின் கனவு இல்லம் திட்டம் : தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News