)
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முக்கிய அப்டேட். பல மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவடைந்திருப்பதால், இனி அம்மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தகுதிகள் இருந்தாலும், மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பிக்க முடியாது. ஏனென்றால் கிட்டதட்ட 14 மாவட்டங்களில் முழுமையாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் இறுதிகட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட்
இப்போதைய சூழலில், அரியலூர், தருமபுரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, நாமக்கல், நீலகிரி, தேனி, தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இனி இந்த மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்காது. இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால், அவர்களுக்கான வாய்ப்பு இனி இல்லை. இதுதொடர்பாக அரசு ஏதேனும் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே, அந்த நாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாம் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாட்டின் கடைகோடி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று அரசின் சேவைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் வழங்கப்படுகிறது.
எந்தெந்த காரணங்களுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம்?
சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய“ போன்ற பல கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி இந்த முகாமிலேயே அரசு அலுவலர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர். பொதுமக்கள் தாங்கள் வழங்கிய மனுக்களின் நிலையையும் ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வசதியையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
எனவே, இறுதிகட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனே விண்ணப்பிக்கவும். இருக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள். இப்போது விண்ணப்பிக்காமல் விட்டால், புதிதாக இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ