)
Kalaingar Magalir Urimai Thogai Rules : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் ஜூன் 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அன்று 9000 இடங்களில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இதுவரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். அதேபோல் ஏற்கனவே இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களும் மீண்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் அறிவித்துள்ளனர். அப்படி விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெளிவாக கூறிவிட்டது.
அதனால், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தில் பயனாளியாக விரும்புபவர்கள் அனைவரும் இந்த திட்டத்துக்கு வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்வது அவசியம். அதன்மூலம் தங்களுக்கு இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் பொறுத்தவரை பரந்துபட்ட பார்வையுடன் எல்லா விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் குடும்பத் தலைவி இல்லை என்றால் அல்லது அவர்களின் பெயர் ரேஷன் கார்டில் இல்லையென்றால் அந்த குடும்பத்தில் 21 வயது நிரம்பிய தகுதியான பெண்கள் இருப்பின், அவர்கள் பெயர் ரேஷன் கார்டில் இருந்தால், அந்த பெண் குடும்ப தலைவியாக கருதப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.
இதுதவிர ஹெச்ஐவி, மரபணு நோய், முதுகு தண்டுவட நோய் உள்ளிட்ட வாழ்வியலை முடக்கும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பங்கள் எல்லாம் அந்த திட்டங்களில் பயன்பெறுபவர்களை தவிர்த்து மற்ற யாரேனும் தகுதியான பெண்கள் அந்த குடும்பத்தில் இருந்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்களே என்று அறிவித்திருக்கிறது. தகுதியானவர்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது எனும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்போது சில விதிமுறைகளில் தளர்வும், புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பல ஊர்களில் மனைவியை இழந்த கணவர்கள் 18 வயது பூர்த்தியடையாத குழந்தைகளை ஏழ்மை நிலையில் வளர்த்து வருகின்றனர். அத்தகைய குடும்பங்களில் பெண்கள் இல்லாததால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க முடிவதில்லை. அதனால், தமிழ்நாடு அரசு அத்தகைய குடும்பங்களையும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்க்க ஏதுவாக விதிமுறைகளில் தளர்வு கொடுத்து அல்லது புதிதாக சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என கருதுகின்றனர். இரண்டு மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படும் ஆண்களும் உள்ளனர். அவர்களுக்கும் இந்த திட்டத்தில் ஏதேனும் வழிவகை செய்ய முடியுமா? என பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இதுதவிர, தமிழ்நாடு அரசுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகள் தொடர்பாக வந்திருக்கும் இன்னும் சில பரிந்துரைகளையும் ஆராய்ந்து அது தொடர்பான வழிகாட்டுதல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ