)
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடப்போகிறது. அதில் யாரெல்லாம் தகுதியில்லாதவர்கள் பட்டியலில் இடம்பெறப்போகிறார்கள் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை எல்லாம் யாரெல்லாம் பூர்த்தி செய்யவில்லையோ அவர்கள் எல்லாம் நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 பெறுவதற்கு தகுதியில்லாதவர்கள் ஆவர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அதாவது, ரேஷன் கார்டை அடிப்படை ஆவணமாக வைத்து, அதில் இருந்து தகுதியானவர்களை தேர்வு செய்து தமிழ்நாடு அரசு மாதம்தோறும் 1.15 கோடி பெண்களுக்கு ரூ.1000 வழங்கி வருகிறது. அதுவும் அவர்களது வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கிறது.
இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு கடந்த மூன்று மாதங்களாக அனுமதி வழங்கியது. மாநிலம் முழவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தி அதில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் விநியோக்கிக்கப்பட்டது. தகுதியான பெண்கள் மற்றும் கடந்த முறை விடுபட்டவர்கள் எல்லாம் இம்முறை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனால், மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் ஆர்வமாக இம்முறை மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்கான காலவகாசமும் முடிந்துவிட்டது.
இப்போது தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான களப்பணிகளை தமிழ்நாடு தொடங்கிவிட்டது. ஊராட்சி வாரியாக பயனாளிகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மகளிர் உரிமைத்தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்த பெண்கள் எல்லோருக்கும் நிச்சயம் ரூ.1000 தமிழ்நாடு அரசு கொடுக்காது. தகுதியான பெண்களை மட்டுமே இத்திட்டத்துக்கு பயனாளியாக தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளை பார்த்திருப்பீர்கள். அதேநேரத்தில் யாரெல்லாம் தகுதியில்லாதவர்கள் என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவர்களாக இருந்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்து இருந்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள்,
* குடும்பத்தில் அரசு ஊழியர்கள் /அரசு ஓய்வூதியம் பெறும் நபர்கள் இருந்தால்,
* குடும்பத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர் அல்லது வருமான வரி செலுத்துபவர் இருந்தால்,
* குடும்பத்தில் சொந்த பயன்பாட்டுக்கான நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள்,
* குடும்பத்தின் மொத்த நிலம் திட்டத்தின் தகுதி வரம்புக்கு மீறி இருந்தால்,
* குடும்பத்தில் ஆண்டுக்கு 50 இலட்சத்திற்கு மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர் இருந்தால்,
* குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர் இருந்தால்,
* குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தால்,
*ஒரே குடும்பத்தில் இரண்டு நபர்கள் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்து இருந்தால்,
* குடும்பத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து பிற ஓய்வூதியம் பெறுபவர், அவரே மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து இருந்தால், இவர்களின் விண்ணப்பம் எல்லாம் கட்டாயம் நிராகரிக்கப்படும். மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்குள் வருபவர்கள் எல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியில்லாதவர்கள் ஆவர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ