Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசு ஜூலை 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்களை பெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகம், கிராமங்கள் வாரியாக இந்த முகாமை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த முகாமில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) பெறாத பெண்கள், ஏற்கனவே விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தில் அரசின் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிகளுக்குள் வரும் அக்குடும்பத்தில் உள்ள தகுதியான மற்றொரு பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அண்மையில் வெளியிட்டது.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்
காலமுறை ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் பயன்பெறுவதற்காகவே தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிகளை திருத்தம் செய்தது. இதனால் அரசு சார்பில் குறைவான ஓய்வூதியம் பெற்று வரும் குடும்பத்தினரும், அக்குடும்பத்தின் பெண்களும் மகிழ்ச்சியில் உள்ளனர், எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள். அதேபோல், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஜூலை 30 வரை நடப்பதால் போதுமான காலவகாசம் இருக்கிறது. அதனால் யாருக்காவது இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க போதுமான ஆவணங்கள் இல்லையென்றால் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளவும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட் எப்போது?
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது விரைவாக முடிவெடுக்கபடும் என்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சம் செப்டம்பர் மாதம் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்புள்ளது. இதனையும் முதலமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?
இருப்பினும் சில காரணங்களால் இந்த முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்களும் இருப்பார்கள். அவர்கள் தாங்களாகவே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா? என்று யோசிக்கலாம். பொதுமக்கள் தாங்களாக விண்ணப்பிக்க முடியாது. இதுநாள் வரை அருகில் உள்ள அரசு இசேவை மையங்கள் வழியாகவே விண்ணப்பிக்க முடியும் என அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் கொடுக்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. எனவே, எனவே, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது. இதுதொடர்பான கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அரசு அலுவலகங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு சரியான வழிகாட்டல் கிடைக்கும்.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் பட்டியல்..!!
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக விண்ணப்பிக்கப்போகிறீர்களா? முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: யார் யாருக்கு இணைய வாய்ப்பு இருக்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ