கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்கத்தில் 9000 முகாம்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் நிறைய இடங்களில் முகாம்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர்.

தமிழகத்தில் உள்ள பெண்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்கம் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த நான்காம் தேதி முதல் இந்த திட்டத்திற்கான விரிவாக்கம் அறிவிக்கப்பட்டு பல இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. 9000 முகாம்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் நிறைய இடங்களில் முகாம்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர். குறிப்பிட்ட சில இ சேவை மையங்களில் மட்டுமே இந்த விரிவாக்கம் தொடர்பான பணிகள் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது.
ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கும் கிடைக்கவில்லை. இதனால் பலரும் விண்ணப்பிக்க முடியாமலும், முகாம்களை கண்டுபிடிக்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பினும் அடுத்த ஒரு வாரத்தில் தேவையான இடங்களில் மகளிர் உரிமை தொகையை திட்டத்திற்கான விரிவாக்க முகாம்கள் அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் யார் யார் விண்ணப்பிக்கலாம்?
ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள வயதானவர்கள் பென்ஷன் வாங்கினாலும், குடும்பத் தலைவிக்கு ரூபாய் ஆயிரம் நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமை தொகைக்காக பலரும் தங்கள் வீடுகளில் உள்ள வயதானவர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் இருந்து நீக்கி வருகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கணவர் அரசு வேலையில் இருந்தால் அவர்களுக்கு பென்ஷன் கிடைக்காது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். மற்றபடி அனைவருக்கும் ரூ. 1000 வழங்க அரசு முன்வந்துள்ளது. இந்த புதிய முகாம்களில் விண்ணப்பிக்கும் பெண்கள் அனைவரது விண்ணப்பங்களும் முழுவதும் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு ரூபாய் 1000 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ