Kalaignar Magalir Urimai Thogai Latest Update: மகளிர் உரிமை தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை இன்று (டிசம்பர் 12) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட இருக்கிறது.
பங்கேற்கும் பெண் சாதனையாளர்கள்
இதன் மூலம் தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் சமூக சேவகியும் பத்மபூஷண் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளா் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் உள்ளிட்ட பல பெண் சாதனையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
பயனடையும் 1 கோடி பெண்கள்
கலைஞர் மகளிர் உரிமையை தொகை திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதன் மூலம் 1.13 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். ரூ. 1000 மாதந்தோறும் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் இன்று நடைபெற இருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை
இந்த கலைஞர் மகளிர் உதவி தொகையின் முக்கிய நோக்கமே பெண்கள் பொருளாதார ரீதியாக சுகந்திரமாக இருக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்க ரூ. 1000 மாதம்தோறும் அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. இந்த தொகை அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுகின்றன. மருத்துவ செலவாக இருக்கட்டும் தங்கள் குழந்தையின் பள்ளி படிப்பிற்க்காக இருக்கட்டும் அவர்கள் வேலை சென்று வர ஒரு செலவாக இருக்கட்டும் என அவர்களுக்கு இந்த தொகை ஏதாவது ஒரு வகையில் பயனடைகிறது.
தற்போது இந்த திட்டத்தை இரண்டாம் கட்டமாக விரிவாக்கம் செய்வது மேலும் பல பெண்களுக்கு இந்த நனமைகள் பெற்று தரும். இந்த நிகழ்ச்சியில், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்தும் அவர்களின் வாழ்க்கையில் இத்திட்டம் எப்படியான முன்னேற்றங்களை வழங்கி இருக்கிறது என்பது குறித்து விரிவாக பேசப்படும். அதேபோல் அரசு செயல்படுத்தி வரும் பிற திட்டங்கள் குறித்து இங்கு விளக்கப்படும். இது மற்ற பெண்களுக்கு இதுபோன்ற திட்டங்களில் சேர ஊக்கமளிக்கும் விதமாக அமையும்.
இன்று நடைபெறும் இந்த 'வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி, பெண்களின் சாதனைகளையும், திறமைகளையும் வெளிப்படுத்தும் ஒரு மேடையாகவும் அமையும். இது அவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் கனவுகளை நிறைவேற்ற அரசு உதவி செலுத்தும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இந்தத் திட்டம் பெண்களின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்பதில் ஜயமில்லை.
மேலும் படிக்க: மக்களே லாஸ்ட் சான்ஸ்.... SIR காலக்கெடு நீட்டிப்பு - எத்தனை நாள்களுக்கு?
மேலும் படிக்க: அதிமுக உடன் கூட்டணி இல்லை...? - தவெக நிறைவேற்றிய 4 தீர்மானங்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









