)
தமிழகத்தில் பெண்களுக்கான பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்களுக்கு வரை அனைவருக்கும் ஏற்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தற்போது தமிழகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று பலரும் தெரிவித்து வந்தனர்.

நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படுமா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூருக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். மேலும் மக்களிடையே பேசும் போது, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் விரைவில் அமைக்கப்படும். இந்த முகாமில் கொடுக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் 45 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து பேசிய முக ஸ்டாலின், "மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய உங்களது பகுதிகளிலேயே வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் கலைஞர் உரிமைத் தொகைக்கு பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த பெண்களுக்கு 45 நாட்களுக்குள் முடிவுகள் சொல்லப்படும். இந்த முகங்கள் அக்டோபர் மாதம் வரை நடைபெறும்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்களில் எவ்வாறு விண்ணப்பிப்பது, அதன் மூலம் எப்படி பயன் பெறுவது என்ற கேள்விகளும் சந்தேகமும் இருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அதற்கான பதில்கள் அளிக்கப்படும். மேலும் தன்னார்வலர்கள் வீடுகளுக்கே வந்து இதற்கான விளக்கத்தையும் அளிப்பார்கள். குறிப்பிட்ட திட்டங்களில் பயன்பெற என்ன தகுதி இருக்க வேண்டும், என்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் போன்ற விவரங்களை மக்களுக்கு தெரிவிப்பார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ