)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சிறப்பு திட்டமான உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம், பல்வேறு அரசு சேவைகளுக்காக விண்ணப்பித்த இலட்சக்கணக்கான மக்கள், இனி தங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை ஆன்லைனிலேயே எளிதாக தெரிந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக காத்திருக்கும் பெண்கள் மத்தியில், இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசின் சேவைகளையும், திட்டங்களையும் மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்லும் நோக்கில், உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் மூலம், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை மற்றும் ஆதார் அட்டை திருத்தங்கள் போன்ற பல்வேறு சேவைகளுக்காக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுவரை இந்த முகாம்களில் மனு அளித்த மக்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? அல்லது பரிசீலனையில் உள்ளதா? என்பதை அறிய முடியாத நிலை இருந்தது. இதனால் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய, அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சிரமத்தை போக்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கிலும், தற்போது இந்த புதிய ஆன்லைன் வசதியைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வசதியின் மூலம், மக்கள் தங்கள் விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கைகளை தாமதமின்றி, இருந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும். இது, அரசின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், மக்களின் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ