Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இப்போது 1.30 கோடி பெண்கள் பயனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. அந்த தொகை யாருடைய உதவியும் இன்றி பெண்களின் வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரத்தில் பணம் கிடைக்காத பெண்கள், தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அவர்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசு விரைவில் குட் நியூஸ் கொடுக்க உள்ள நிலையில், பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட் ஒன்று உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் இறந்துவிட்டால், அவர்களின் பெயர்களை அத்திட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். ஏனென்றால், இறந்தவரின் பெயரில் அரசு திட்டங்களையும், நிதியுதவியும் பெறுவது சட்டப்படி குற்றம். எனவே, இறந்தவரின் பெயரை மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து நீக்க விண்ணப்பிக்க வேண்டும். இதை செய்வது எப்படி என கேட்கிறீர்களா?.
உங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன்பாக இறந்தவரின் இறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள். அந்த சான்றிதழை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் ஆவணத்தை உறுதிசெய்து பயனாளியின் பெயரை இத்திட்டத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள்.
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்
இதனைத் தொடர்ந்து உங்களின் ரேஷன் கார்டில் இருந்தும் இறந்தவரின் பெயரை நீக்க வேண்டும். இதற்கு டிஎன்பிடிஎஸ் வெப்சைட்டில் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். அல்லது ஆப்லைன் முறையில் நேரடியாக மனு கொடுத்தும் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையம் வழியாகவும் பெயரை நீக்கக்கோரி விண்ணப்பிக்கலாம்.
பெயரை நீக்கிய பிறகு என்ன செய்ய வேண்டும்?
இறப்புச் சான்றிதழ் பெற்றவுடன், ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கியவுடன் அதே குடும்பத்தில் தகுதியான பெண் பயனாளிகள் இருப்பின் அவர்கள் இத்திட்டத்தில் தங்களை சேர்க்கக்கோரி மனு கொடுக்கலாம். ஆனால், அந்த பெண் கட்டாயம் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். திருமணம் ஆகவில்லை என்றாலும், குடும்ப தலைவியாக கருதப்பட்டு, அப்பெண்ணின் பெயரில் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாடு அரசு வழங்கும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முக்கிய அப்டேட்
இதுதவிர, ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்குபவர்களுக்கு ஒருமுக்கிய அப்டேட் காத்திருக்கிறது. இத்திட்டத்தில் மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகுமா? அல்லது திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டு, சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கொடுக்கபடுமா? என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டு பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விரைவில் குட் நியூஸ் கிடைக்கப்போகிறது என்பது மட்டும் உறுதி.
திமுக vs அதிமுக தேர்தல் வாக்குறுதி என்ன?
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போதும் அதிமுக பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என அறிவித்தது. குல விளக்குத் திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. இருப்பினும், அந்த வாக்குறுதி மக்களிடம் எடுபடவில்லை. ஆனால், அதேதிட்டத்தை இப்போதும் அதிமுக அறிவித்திருக்கிறது. மாதம் ரூ.1500 கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால், இத்திட்டம் குறித்து திமுக எதுவும் இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தல் அறிவிக்கையில் மிகப்பெரிய அறிவிப்புகளை கொடுக்க உள்ளது அக்கட்சி. அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை + பொங்கல் பரிசு - தை மாதம் தமிழ்நாடு அரசின் டபுள் ட்ரீட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









