தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பேசினார்.


அப்போது தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 20 தொகுதி இடைத்தேர்தலையும் சந்திக்க மக்கள் நிதி மய்யம் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் ஊழலற்ற, சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது, தேர்தலின்போது பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறைகேட்டை மாற்ற மக்களை சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.


முன்னதாக முதல்வர் பழனிசாமியை மாற்றவேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு MLA-க்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்தனர். இதனையடுத்து பேரவைத் தலைவர் தனபால் இந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 


அவைத்தலைவரின் உத்தரிவினை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். எனினும் தீர்பு அவைதலைவருக்கு சாதகமாய் அமைந்து, 18 பேரின் தகுதி நீக்கத்தை உறுதி செய்தது. 


இதனையடுத்து அந்த 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருணாநிதி, மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போஸ் ஆகியோரின் மரணம் காரணமாக அந்த தொகுதிகளும் MLA இல்லாமல் காலியாக உள்ளன. 


எனவே இந்த 20 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் 20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தாங்கள் தயாராக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கட்சி துவங்கி ஒரு ஆண்டில் தேர்தலை சந்திக்க கமல்ஹாசன் தயாராகியுள்ள நிலையில், கட்சி கட்டமைப்பினை கட்டமைத்து வரும் ரஜினிகாந்த் தொடர்ந்து மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது!