சென்னை மேடவாக்கத்தில் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் ராணி அஹில்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு கட்சியினரிடையே கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை செளந்தராஜன், மழையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் கொரோனா பாதிப்பு ஆங்காங்கே காணப்படுகிறது, கொரோனா பாதிப்பு வராமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தமிழக அரசும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் படிங்க: கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை விண்ணப்பிக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நடிகர் கமலஹாசன் கருத்து பரபரப்பாக பேசப்படுகிறது இது நாட்டின் பிரிவினையை ஏற்படுத்தி விட கூடாது என்பது தான், தமிழுக்கு நாம் எதிரி கிடையாது, நமது நோக்கம் நாம் மொழியை பற்றி பேசும் போது அது நாட்டில் உள்ள ஒன்றுமையை சீர்குலைத்து விட கூடாது, உங்கள் சுயநல அரசியல் சகோதரர்களிடம் பகை உணர்ச்சியை ஏற்படுத்தி விட கூடாது என்று தான் நாங்கள் சொல்கிறோம். பனாராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை ஏற்படுத்தியது பிரதமர். தமிழுக்கு அங்கீகாரம் கொடுத்து வருகிறோம். திமுக கொடுக்கும் ராஜ்யசபா சீட்டிற்காக மொழியை பற்றி பேசினால் அவர்கள் மகிழ்வார்கள் என்று நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரிக்காதீர்கள். புதியகல்விக் கொள்ளைகையில் தாய்மொழிக் கல்வியை கொண்டு வந்தது பாஜக.
தமிழே தெரியாமல் உயர்கல்வி படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. என் தாய் மொழி நிச்சயம் தொன்மையானது. ஆனால் மற்ற மொழிளை பற்றி பேசும் போது அவர்கள் மனம் புண்பட்டுவிட்டு ஒன்றுமையை குலைத்து விட கூடாது, அது மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் பேசுகிறோம். சுயநலத்திற்காக திரைப்படத்தை வியாபாரமாக்கும் போது கன்னடம் வேண்டும், தெலுங்கு வேண்டும், மலையாளம் வேண்டும், அரசியல்வாதியாக பொய் முகத்தை காட்டும் போது நீங்கள் வேணடுமென்றே மொழி அரசியலை கையெலெடுத்து இந்த நாட்டின் ஒற்றுமையை கெடுத்து விடாதீர்கள் என தமிழ் மீது பற்று வைத்திருக்கிற என்னை போன்றோர்கள் சொல்கிறோம்.
முதல்வர் எதிர்கட்சிகளை கோமாளிகள் என்று சொல்கிறார். கோமாளிகள் என்று சொல்லும் அளவிற்கு தரம் தாழ்ந்து போயிருக்கிறீர்கள் தயவு செய்து இத்தகைய வார்த்தைகளை பயனடுத்தாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். துணை முதலமைச்சர் உதயநிதி வர மாட்டார் என்பதற்காக ஒரு சுற்றறிக்கை போகிறது அதில் கழகத்தின் பொருப்பை போட்டு இந்த அரசாங்க சர்குலர் எங்கே தயார் செய்யப்படுகிறது ஆட்சிக்கும் கட்சிக்கும் வேற்றுமை இல்லாமல், 7வது தீர்மானத்தில் உதயநிதிக்கு எல்லாரும் துணை போகனும் அப்படிப்பட்ட தீர்மானத்தில் இராணுவ வீரர்களுக்கு பாராட்டு கிடையாது. கனிமொழி உலகம் எல்லாம் சுற்றி விட்டு வந்திருக்கிறார்கள். ஆபரேசன் சிந்தூர் நம் நாட்டை பாதுகாக்கிறது என சொல்லிவிட்டு தீர்மானம் நிறைவேற்ற வில்லை இது தான் அவர்கள் அரசியல்
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தீர்ப்பு ஞானசேகரன் பின்னால் திமுகவை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என அண்ணாமலை காணொளியாக வெளியிட்டுருக்கிறார் முதல்வர். இதற்கு பதில் சொல்லியாக வேண்டும், ஐந்தரை மாதம் கேஸ் நடத்தினோம் கேஸை முடிச்சுட்சோம், ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என முத்திரை குத்த முடியாது யார் அந்த யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வரை தமிழக மக்கள் உங்களை எதிர்த்து தான் வாக்களிப்பார்கள். 2026ல் இதற்கு பதில் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் எல்லாவற்றையும் மூடி மறைத்து விட கூடாது என்பதை தமிழக அரசுக்கு சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
மேலும் படிங்க: ஒரே நாளில் 8 பேர் படுகொலை.. தமிழ்நாடா? சுடுகாடா? தமிழக அரசுக்கு கண்டனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









