Tiruchendur Kanda Sashti 2025 : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் 2025 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா 22.10.2025 முதல் 28.10.2025 வரை நடைபெறவுள்ளது. 27.10.2025 அன்று மாலை 04.00 மணியளவில் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல், 28.10.2025 அன்று அதிகாலை 05.30 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், அன்று மாலை 06.00 மணியளவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழா நடைபெற்று, அன்று இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
கந்தசஷ்டித் திருவிழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 லட்சம் லிட்டர் வீதம் 22.10.2025 முதல் 28.10.2025 முடிய குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்யவும், திருச்செந்தூர் நகராட்சி சார்பாக திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்திடவும், திருச்செந்தூர் ஆவுடையார் குளத்திலிருந்து போதுமான அளவு தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பொது சுகாதாரம் சார்பாக திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் குப்பைக் கூளங்களை அவ்வப்போது அகற்றிடவும், ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் திருக்கோயில் வளாங்களில் கொசு மருந்து தெளிக்கவும், சஷ்டித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 6 நாட்களும் விரதம் இருப்பதால் பக்தர்கள் வெறிநாய்க்கடிக்கு ஆளாகாமல் இருக்கும் பொருட்டு பொருட்டு திருக்கோயில் வளாகங்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து செல்லவும், கடற்கரை பகுதியில் இருந்து திருக்கோயிலுக்கு வரும் மாடுகளை பிடித்துச் செல்ல திருச்செந்தூர் நகராட்சியின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் திருக்கோயில் வளாகம், குரும்பூர் குரங்கன்தட்டு நீரேற்று நிலையம். திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்று நிலையம், ஆகியவைகளுக்கு ஒன்றாம் திருநாள் முதல் ஏழாம் திருநாள் முடிய (22.10.2025 முதல் 28.10.2025 வரை) தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவும், போக்குவரத்து துறையின் சார்பாக 27.10.2025 சூரசம்ஹாரம் அன்று பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவதால் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், சூரசம்ஹாரம் அன்று தென்னக ரயில்வே மூலம் சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்கிடவும், கடற்கரைப் பகுதியில் கடல் பாதுகாப்பு வளையத்துடன் தீயணைப்புத் துறையினர் பணிபுரியவும், கடலில் நீராடும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் பொருட்டு கடல் குளியாட்கள் 4 நபர்கள் மற்றும் கடலாள் ஒருவரை அனுப்பி வைக்க மீன்வளத்துறை இணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கந்தசஷ்டித் திருவிழாக் காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் அலைபேசி/தொலைபேசி சீராக இயங்கத்தக்க வகையில் தற்காலிக அலைபேசிக் கோபுரம் அமைத்து அலைபேசி/தொலைபேசி இணைப்புகள் முறையாக சரிவர இயங்கச் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்திடம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவத்துறை சார்பாக திருவிழாக் காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், திருக்கோயில் வளாகத்தில் திருவிழாக்காலங்கள் முழுவதும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடனும், அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதியுடனும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்திடவும், திருக்கோயிலை சுற்றித்திரியும் நாய்களால் பக்தர்கள் பாதிக்கப்பட்டால் உரிய மருத்து சிகிச்சை வழங்கும் வகைக்கு வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் (Anti Rabbies Vaccines) இருப்பு வைத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், தீயணைப்பு & மீட்பு பணிகள் துறை சார்பாக திருவிழாக்காலங்களில் தீயணைப்பு ஊர்தி முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், மருத்துவ ஊர்தியுடன் தயார் நிலையில் வைத்திருக்கவும், வேளாண்மை பொறியியல் துறை சார்பாக திருக்கோயில் கடற்கரையில் உள்ள மேடுபள்ளங்களை சீரமைக்கவும், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அங்காங்கே பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தினை ஆய்வு செய்து, பரிந்துரை செய்த பின்னரே அன்னதானத்தினை பக்தர்களுக்க வழங்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முழுவதும் திருக்கோயில் வாளகத்தில் பக்தர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கவும், கந்த சஷ்டி திருவிழா காலங்களில் திருக்கோயிலுக்குள் பக்தர்கள் வரிசை முறையில் நன்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு காவல்துறையினர் திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவும், 27.10.2025 சூரசம்ஹாரம் அன்று திருக்கோயில் கடற்கரையில் போதிய பாதுகாப்புக்கு போதிய காவலர்கள் நியமிக்கவும் மற்றும் சுவாமி சப்பரத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கும், சூரசம்ஹாரம் அன்று திருச்செந்தூர் நகர் முழுவதும் போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளவும், சூரசம்ஹாரம் அன்று திருக்கோயிலுக்கு வருகை தரும் வாகனங்களுக்குத் வாகன அனுமதிச் சீட்டுகள் (CAR PASS) அச்சிடுதல் மற்றும் விநியோகம் செய்தல் குறித்தும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் யாகசாலையின் அருகில் அமைக்கப்படவுள்ள மர கேலரி மற்றும் கடற்கரையில் உள்ள மர மேடைகளை (Watch Tower, T.V.Tower) ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கவும், திருச்செந்தூர் நகரில் இரும்பினால் ஆன தற்காலிக பாலம் திருக்கோயில் மூலம் அமைக்கப்படுவதை மேற்பார்வை செய்து உறுதித் தன்மை சான்று வழங்கிட பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார். திருவிழாக் காலங்களுக்கு முன்பாக நகராட்சிக்கு உட்பட்ட தெரு விளக்குகள் அனைத்தும் இயங்கும் நிலையிலிருப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுத்திடவும், மேலும், திருச்செந்தூர் நகர் முழுவதும் உள்ள பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுத்திட கழிவுநீர் அப்புறப்படுத்தும் வாகனங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள நகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக போற்றப்படுவதும், தமிழகத்தின் தலைசிறந்ததிருக்கோயில்களில் முக்கியமானதாக கருதப்படுவதுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டித் திருவிழா சீரும் சிறப்போடும் நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்பும் வழங்கிட வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | மாதம் ரூ.8000 பென்சன் பெற விண்ணப்பிக்கவும் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









