தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்வதாக கடந்த ஆண்டு கடிதம் எழுதியதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதுடன், அப்போதைய தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா எழுதிய கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த கடிதத்தில் தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து மாநில கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்திருப்பதாகவும், அந்த கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளக்கூடியதை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். வேறு எதையும் ஏற்றுக் கொள்ளாது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்பதாக நீங்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில் எந்த இடத்திலும் தமிழ்நாடு அரசு சொல்லவில்லை. உண்மையை திரிப்பதை நிறுத்தங்கள் என காட்டமாக கூறியுள்ளார்.
கனிமொழி எழுதியிருக்கும் எக்ஸ் பதிவில், " இந்த கடிதத்தில், தமிழ்நாடு PM SHRI பள்ளிகளை ஏற்பது என்பது தமிழ்நாடு அரசு அமைத்துள்ள கல்வித்துறை செயலாளரின் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்றும், உங்கள் மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதை மட்டுமே நாங்கள் ஏற்றுக்கொள்வோம். உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள்" என பதிலளித்துள்ளார்.
அதேபோல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எழுதியிருக்கும் பதிவில், மத்திய அரசை காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் எழுதியிருக்கும் எக்ஸ் பதிவில், " அறிவியலோ, சாதனையோ இல்லாத, அரசியல் மட்டுமே செய்பவர்கள்... கொள்கைகள் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் செயல்படுபவர்களிடம்.... குழந்தைகளின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள். காலத்தின் கொடுமை!!" என காட்டமாக கூறியுள்ளார்.
இதேபோல் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பிடிஆர், மும்மொழிக் கொள்கை குறித்து மீண்டும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில் தென்னிந்தியாவுக்கு மட்டும் மும்மொழிக் கொள்கை, இந்தி பேசும் மாநிலங்களுக்கு ஒரு மொழிக் கொள்கையா என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆளும் ஒரே ஒரு மாநிலத்தில் மும்மொழிக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்தியதை ஆதாரமாக காட்டுங்கள், அதன்பிறகு தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை பற்றி பேசலாம் என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அறிவியல், மற்றும் செயல் திட்டங்கள் அதனுடைய விளைவுகளில் அடிப்படையில் செயல்படும் எங்களைப் போன்ற தமிழ்நாட்டுக்கு எப்போதும் அரசியல் மட்டுமே செய்யக்கூடியவர்கள் எங்களை பார்த்து அரசியல் செய்யாதீர்கள் என சொல்வது காலத்தின் கொடுமை என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு இப்போது விண்ணப்பித்தால் எப்போது வரும்? முக்கிய அப்டேட்
மேலும் படிக்க | ரேஷன் கார்டு ரத்து.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை - மக்களே உஷார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









