Kanimozhi Against Waqf Amendment Act: திருவாரூரில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு மாநில ஜமாத்துலா உலமா சபை கண்டனம் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தியது. இதில், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்.
திருவாரூர் தெற்கு வீதியில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு மாநில ஜமாத்துலா உலமா சபை கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி சிறப்புரையாற்றினார்.
Kanimozhi: 'தொடர்ந்து போராடுவேன்'
அப்போது பேசிய கனிமொழி,"நாட்டிலே மதவாத அரசியல் கையில் எடுத்திருக்கக் கூடிய பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வந்துருக்க கூடிய வக்பு சட்டத்திற்கு மக்கள் இடையே ஒரு பிரிவினையை, இஸ்லாமியர்கள் மனதில் ஒரு பயத்தை உருவாக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்ஃபு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்த பாஜக அரசைக் கண்டித்து திருவாரூரில் நடைபெற்ற, "நமது வக்ஃப், நமது உரிமை" போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறுபான்மையின மக்களை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து உரையாற்றினேன்.… pic.twitter.com/RmTLZZBhVN
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 13, 2025
இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மத நல்லிணத்திற்கு எதிராக கொண்டுவரபட்ட மசோதாவை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நம்முடைய முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டிலேயே சட்டமன்றத்திலேயே இதற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. அந்த வழியிலே இங்கு நடக்கக்கூடிய, தமிழ்நாடு முழுவதும் நடக்கக்கூடிய இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து இதற்கு எதிராக போராடுவேன்" என்றார்.
Kanimozhi: இனிமேல் அஸ்தமனம் கிடையாது
மேலும் பேசிய அவர்,"தமிழ்நாட்டில் உதயசூரியன் உதித்து விட்டது இனிமேல் அஸ்தமனம் கிடையாது. நான் வரும்போது கமலாலயத்தை (தமிழக பாஜக தலைமையகம்) தாண்டி வந்தேன். அந்த கமலாலயத்தில் கூட ஒரு தாமரை பூ இல்லை.
விவசாயிகள் மீது அக்கறை இல்லை, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் என்று இந்த மண்ணிலே அடித்தட்டில் இருக்கக்கூடிய அத்தனை மனிதர்களையும் நசுக்கக் கூடிய சட்டங்களை கொண்டு வந்து கொண்ட இருக்கக்கூடிய அரசு தற்போது இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எதிராக கொண்டு வருகிறது" என்றார்.
Kanimozhi: நீட் தேர்வுக்கு எதிராக...
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அணுகியிருப்பது குறித்த கேள்விக்கு, "உச்சநீதிமன்றத்திலா பல காலமாக போராடி கவர்னருக்கு கிட்டத்தட்ட ஒரு முதலமைச்சர் சொல்லிக் கொடுக்கக்கூடிய கவர்னருக்கு ஒரு நடத்தை விதிகள் (Code Of Conduct) இருக்க வேண்டும். கிட்டத்தட்ட அவங்க ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்ப்பை சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் அங்கே சென்று இருக்கின்றோம்" என்றார்.
மேலும் படிக்க | ஸ்டாலின், சபரீசன் வீட்டுக்கு ரெய்டு வரும்-பாஜக கூட்டணிக்கு பின் தம்பிதுரை பேட்டி
மேலும் படிக்க | இந்த நாளான்று மதுக்கடைகளை மூடியே ஆக வேண்டும் - சீமான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









