)
Kanimozhi, DMK : கன்னியாகுமரியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி, தேர்தலில் பா ஜா எந்த எல்லைக்கும் செல்வார்கள்.பாஜக தேர்தலில் மகாராஷ்டிரா, அரியானாவில் செய்தது போல் எல்லா வேலைகளையும் செய்யும். உண்மையான வாக்காளர்களை நீக்கி விட்டு புதியதாக சேர்ப்பார்கள் இதில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். எத்தனை முறை வாக்காளர்கள் சரிபார்ப்பு முகாம்கள் நடத்தப் படுகிறதோ ஒவ்வொரு முறையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வேர்கிளம்பி- யில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், முதல்வரின் உடன்பிறப்பே வா என்ற அழைப்பின்படி பெண்கள், இளைஞர்களை கழகத்தில் இணைக்க வேண்டும். தேர்தல் களத்தில் எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்கு யார்?, யார்?. ஒன்றாக இணைய முடியாதோ அவர்களை எல்லாம் பாஜக ஒன்றாக இணைத்துள்ளது. அவர்கள் தேர்தலில் எந்த எல்லைக்கும் செல்வார்கள். இது இந்த மாவட்டத்தில் அதிகம் இருக்கும்.
நாம் நமக்குள் இருக்கும் விருப்பு, வெறுப்புகளை களைந்து கட்சி வெற்றி நம் வெற்றி என்ற உறுதியுடன் செயலாற்ற வேண்டும். நமக்குள் இருக்கும் கருத்து சண்டைகளை தேர்தலுக்கு பின் பார்த்து கொள்ளலாம். தேர்தல் முடியும் வரை ஒற்றுமையாக இருந்து களப்பணியாற்ற வேண்டும். எல்லா தொகுதிகளிலும் கூட்டணியினர் போட்டியிட விரும்புவார்கள். அப்படியென்றால் வேறு மாநிலத்தில் தான் தொகுதி ஒதுக்க வேண்டும். எல்லா தொகுகளிலும் யார் போட்டியிட்டாலும் திமுக போட்டியிடுகிறது என்ற உணர்வுடன் திமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். முதல்வரின் உடன்பிறப்பே வா உறுப்பினர் சேர்க்கையில் எந்த படிவங்களையும் பார்த்து உறுப்பினர் சேர்க்க கூடாது.
இளம் பெண்கள், இளைஞர்களுக்கு கல்விக்காக மாதம் தோறும் வழங்கப்படும் ரூ 1000 உதவித் தொகை தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வழங்கப்படவில்லை. குடும்ப பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ரூ 1000 உதவித் தொகை ஆகியவற்றை எடுத்து கூறி அவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுகிறது. கலைஞர் உதவித்தொகை கிடைக்காத குடும்ப பெண்களுக்கு அதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பாஜக தேர்தலில் மகாராஷ்டிரா, அரியானாவில் செய்தது போல் எல்லா வேலைகளையும் செய்யும். உண்மையான வாக்காளர்களை நீக்கி விட்டு புதியதாக சேர்ப்பார்கள் இதில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். எத்தனை முறை வாக்காளர்கள் சரிபார்ப்பு முகாம்கள் நடத்தப் படுகிறதோ ஒவ்வொரு முறையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். எல்லோரும் விழிப்புடன் செயல்பட்டு முழு வெற்றியை முதல்வரிடம் சமர்பிக்க வேண்டும் என கனிமொழி பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ