)
Woman Bite Daughter In Law Ears Dowry Harassment : கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை கடித்து கொடூரமாக தாக்கிய சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரதட்சணை கொடுமை!
திருவட்டார் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் டெம்போ டிரைவர் இவரது மனைவி மஞ்சு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வரதட்சணை கேட்டு மாமியார் மஞ்சுவிடம் அடிக்கடி தகறாரில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவனை மஞ்சு தட்டிகேட்டதாகவும். அப்போது,மாமியார் அல்போன்சா மருமகளிடம் தகராறில் ஈடுபட்டு கல்லால் தலையில் கொடூரமாக தாக்கி காதை கடித்து துண்டாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த மஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பத்மநாபபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற மஞ்சு மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், இது குறித்து மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை கடித்து குதறிய மாமியாரால் குமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆறாத ரிதன்யாவின் மரணம்!
திருப்பூர் ரிதன்யாவின் மரணத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம். திருமணமாகி 70 நாட்கள் கடந்த நிலையில், கணவரின் கொடுமை மற்றும் வரதட்சணை கொடுமைகளை தாங்க முடியாமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிதன்யா போல எந்த பெண்ணும் இறந்து விடக்கூடாது என்று அவரது பெற்றோர்கள் உள்பட மக்கள் பலர் கூறி வந்தனர். இந்த நிலையில், இப்படி பெண்ணுக்கு நேர்ந்துள்ள சம்பவம், பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ