Kanyakumari Son Killed Sick Father : குமரி மாவட்டம் அருமனை பகுதியை அடுத்த இடைக்கோடு - முள்ளுவிளை பகுதியை சார்ந்தவர் சிகாமணி. 70 வயதாகும் இவர், கூலி தொழிலாளியாக இருந்தார். இவருக்கு 4 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனர்.
படுத்த படுக்கையான தந்தை..
4 மகன்களை மூன்று பேருக்கும்,மகளுக்கும் திருமணம் ஆகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.கடைசி பையனான சுனில் குமார் (37) என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை.
இதற்கிடையே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தந்தை சிகாமணியின் இடது கால் அகற்றபட்டது - இதனால் நடமாட கூட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனால் மகன்கள் சேர்ந்து அவர்களது வீடருகிலேயே தனியாக ஒரு சிறிய அறை அமைத்து தங்க வைத்து கவனித்து வந்துள்ளனர்.கல்யாணம் ஆகாத கடைசி பையனான சுனில் குமார் தந்தையுடன் தங்கி வந்தவுடன் - வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
தீயிட்டு கொளுத்திய மகன்!
இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு சுனில் குமார் மற்றும் தந்தை சிகாமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கொன்று விடுவேன் என்று கூறி - பெயிண்டில் கலக்க வைத்திருந்த டின்னரை எடுத்து அவரது உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துவிட்டு வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.
படுத்த படுக்கையாக இருந்த சிகாமணிக்கு எந்திரிக்க கூட முடியாததால் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது.இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 50 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மகன் கைது :
தொடர்ந்து உடனடியாக மற்ற மகன்கள் தந்தையை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதற்கிடையே எதுவும் நடக்காதது போல் அடுத்த நாள் காலையில் வீட்டில் வந்து உறங்கிக் கொண்டிருந்த - சுனில் குமாரை பளுகல் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிகாமணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதை தொடர்ந்து பளுகல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து - சுனில் குமாரை சிறையில் அடைத்தனர். போலீசாரின் விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக இந்தக் கொலை நடந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.சொத்து பிரச்சனை காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த தந்தையை டின்னர் ஊற்றி தீ வைத்து கொளுத்தி மகன் கொலை செய்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | இன்னும் பல தொழில்கள் தொடங்குவேன் - அண்ணாமலை பேட்டி!
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : முதலைமச்சர் போட்ட முக்கிய உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









