)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம், மகா தீபம் ஏற்றக்கூடிய நாளில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 40 லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது, அதற்குண்டான பூர்வாங்கு பணிகள் பந்தல் அமைத்தல் க்யூ லைன் அமைத்தல் சாமி புறப்படும் வாகனங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் சரக டிஐஜி தர்மராஜன் இன்று ஆய்வு மேற்கண்டார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றக்கூடிய தீப மண்டபம், பக்தர்கள் இலவச தரிசனம் செய்யக்கூடிய இடம் மற்றும் தினம்தோறும் சாமி புறப்பாடு செய்யக்கூடிய இடம், பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய இடம், அதே போன்று எந்தெந்த இடங்களில் பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களில் எவ்வாறு நெரிசலின்றி தவிர்ப்பது, திருக்கார்த்திகை தீப திருவிழா நாட்களில் வரக்கூடிய பக்தர்கள் எந்த வித சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.
அதுமட்டுமின்றி நான்காம் பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய இடம் இலவச க்யூ லைன் மற்றும் கட்டண தரிசன க்யூ லைன் உள்ளிட்டவையும் பார்வையிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் இடம் விபரங்களை கேட்டறிந்தார்.
இந்த ஆண்டு தீபத் திருவிழா அன்று அனுமதிச்சீட்டு பெற்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களை தவிர்த்து மற்ற பக்தர்கள் எவ்வாறு கோவில் தரிசனம் செய்வது என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தார், இந்த ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ