Karti Chidambaram Latest News Updates: திருப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை மக்களவை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார்.
Karti Chidambaram: அடிக்கடி தேர்தல் வருவதே நல்லது
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர், அதற்கு அவரும் பதிலளித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நான் எதிர்க்கிறேன். அது சாத்தியமில்லாத ஒன்று. ஜனாதிபதி ஆட்சி முறையில் மட்டும்தான் ஒரு நிலையான காலகட்டம் இருக்க முடியும். ஆனால் நம்முடைய அரசியல் சாசனத்திற்கும் நம்முடைய ஆட்சி முறைக்கும் இது எதிரானது" என்றார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கும்பொழுது செலவுகள் குறையும் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் தேர்தலுக்கு அவ்வளவு செலவாவதில்லை. என்னைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஐந்து - ஆறு தேர்தலில் நடப்பது நல்லது, அடிக்கடி தேர்தல் வரும்போது தான் மக்கள் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும், அரசியல் கட்சிகளும் அப்போதுதான் விழிப்போடு இருப்பார்கள். இல்லையென்றால் மெத்தனப்போக்கோடு இருப்பார்கள். மாநிலத் தேர்தலின் மூலமாக கூட மத்திய அரசுக்கு மக்கள் பாடங்களை புகட்டுவார்கள், அடிக்கடி தேர்தல் வந்தால்தான் மக்கள் அவர்களது அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்த முடிகிறது" என விரிவாக பதிலளித்தார்.
Karti Chidambaram: பராசக்தி படம் குறித்து...
மேலும், கடந்த ஜன. 9ஆம் தேதி வெளியான பராசக்தி திரைப்படத்தை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, "சாரிடான் மாத்திரை தான் மிச்சம்" என பதிலளித்தார். இன்றைய தினம் பராசக்தி பட குழுவினர் டெல்லியில் பிரதமர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளது குறித்தான கேள்விக்கு, "நான் இரண்டு படங்களையும் பார்க்க போவதில்லை" என பராசக்தி, ஜனநாயகன் ஆகிய திரைப்படங்களை மறைமுகமாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "திரைப்படத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசியலை யாராவது நிர்ணயம் செய்ய நினைத்தால் அது தவறு. திரைப்படத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசியலையோ, மக்களின் எதிர்பார்ப்பையோ, மனநிலையையோ வெளிப்படுத்தலாம் என்று நினைத்தால் தமிழ்நாடு அரசியலில் புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
பராசக்தி படம் வரலாற்று படமா?, சரித்திரத்தைப் படித்தவர்களும் ஆராய்ச்சி செய்தவர்களும்தான் இந்த படத்தை எடுத்துள்ளார்களா?. பராசக்தி பட குழுவினர் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளட்டும், ஆஸ்கர் விருதுக்கு கூட படத்தை பரிந்துரைக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அது ஒரு பிரச்னை இல்லை (Irrelevant Issue) என்றார். தெரு நாய் பிரச்சனை, ரேபிஸ் உயிரிழப்பு, குப்பை அள்ளாதது, கல்விகட்டணம் உயர்வு, படித்தவர்களுக்கு வேலை கிடைக்காதது எல்லாம் தான் பெரிய பிரச்னை (Relevant Issue). அதேபோல், படத்தில் உள்ளது எல்லாம் Relevant Issue கிடையாது. மேலும், எந்த படத்தையும் தடை செய்ய வேண்டாம். மக்களுக்கு எது உண்மை? எது பொய்? என்று தெரியும். எனவே இதையெல்லாம் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். படம் பார்க்க விரும்புபவர்கள் சென்று பார்ப்பார்கள்.
Karti Chidambaram: ஆட்சி அதிகாரத்தில் பங்கு
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது சமீப காலமாக கிடையாது. அது ஒரு யதார்த்த எதிர்பார்ப்பு. எந்தக் கட்சி ஆட்சி அதிகாரம் வேண்டாம் என்று தேர்தலில் நிற்கிறார்கள்?. எந்த அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டாலும் ஜெயிக்க வேண்டும், அதற்காக தான் தேர்தலில் நிற்கிறார்கள். 1967ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சி நேரடி ஆட்சியில் இல்லை என்பது உண்மைதான். அதற்கு பின்பு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை நழுவவிட்டோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது எந்த கட்சிக்கு தான் இல்லை" என்றார்.
தொடர்ந்து, கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா என்ற கேள்விக்கு "234 தொகுதிகள்தான் தமிழ்நாட்டில் உள்ளது, எனவே அதற்குள் தான் நாம் அடங்கிக் கொள்ள வேண்டும். அது போக போக தான் தெரியும். ஆனால் யாராக இருந்தாலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்" என்றார்.
Karti Chidambaram: நடிகரை பார்க்க கூட்டம் வருகிறது
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை பிரச்னைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து விஜய்க்கு அளித்துள்ள ஆதரவு குறித்தான கேள்விக்கு, "நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் ராகுல் காந்தி ஆதரவு அளிப்பார். அது தனி மனித சுதந்திரமாக இருந்தாலும் சரி கருத்து சுதந்திரமாக இருந்தாலும் சரி.
விஜய்க்கு ஓட்டு வரும், அதில் சந்தேகமே கிடையாது. ஆனால் ஓட்டு சீட்டாக மாறுமா என்று சொல்லத் தெரியாது. ஆதரவே ஓட்டாக மாறாது, ஓட்டுகள் சீட்டாக மாறாது. தமிழக வெற்றி கழகம் ரசிகர் மன்றமாக இருப்பதால் ஒரு நடிகரை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வருகின்றனர். கொள்கை பிரகடனத்தை கேட்பதற்காக ஒன்றும் அந்த கூட்டம் வரவில்லை. விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. எனவே அவர்கள் வருகிறார்கள். தற்போது அரசியல் கட்சிகளின் மேடை பேச்சுகளை கேட்பதற்கு மக்கள் பெரிதும் விரும்புவதில்லை. கிரிக்கெட்டில் கூட மேட்ச் பார்ப்பதற்கு செல்வதை காட்டிலும் பயிற்சி எடுப்பதை காண்பதற்கு கூடதான் கூட்டங்கள் சென்றது.
விஜய்யை அரசியல் தலைவராக பார்ப்பதற்கே அதிகப் பேர் வருகிறார்கள் என்று பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருப்பது குறித்தான கேள்விக்கு, "அனைவருக்கும் ஒரே சிந்தனை இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் அவரது கருத்துக்களை தெரிவிக்கலாம்" என பதிலளித்தார்.
மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயில்: பொங்கல் நேரத்தில் வெளியான அறிவிப்பு... அலர்ட் பயணிகளே!
மேலும் படிக்க | பகுதிநேர ஆசிரியர் தற்கொலை.. “கோரிக்கைகளை நிறைவேற்றுமா திமுக?”
மேலும் படிக்க | புதிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகள் : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









