)
தமிழகத்தையே உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளரான வி.பி. மதியழகனை, தனிப்படை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவரை, திங்கட்கிழமை இரவு கரூரில் வைத்து கைது செய்துள்ளனர். தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தொடர்பாக, கரூர் நகர காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தது.
கரூர் தவெக மா.செ. கைது!#TVKVijay #TVKStampede |#Vijay #Karur #police #news #zeetamilnews pic.twitter.com/omeb75HHGu
— Zee Tamil News (@ZeeTamilNews) September 29, 2025
இந்த கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதியை, தவெக சார்பில் மதியழகன் தான் காவல்துறையிடம் பெற்றிருந்தார். எனவே, இந்த வழக்கில் அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சம்பவம் நடந்த உடனேயே, மதியழகன் தலைமறைவானார் என்று கூறப்படுகிறது. அவரை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இருப்பினும் தமிழக வெற்றிக் கழக தரப்பில், அவர் தலைமறைவு ஆக வில்லை என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தீவிர ஆலோசனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கரூர் புறநகர் பகுதியில் மதியழகனை தனிப்படை காவல்துறையினர் திங்கட்கிழமை இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதியழகனிடம், கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கூட்டம் கூடியதற்கான காரணம் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கரூர் துயர சம்பவத்தில், முக்கிய பொறுப்பாளராக கருதப்படும் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது, இந்த வழக்கின் விசாரணையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையின் முடிவில், இந்த மாபெரும் சோகத்திற்கு பின்னால் உள்ள பல மர்மங்கள் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை சனிக்கிழமை இரவு விஜய் சந்திக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் சந்திக்க முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது காவல்துறை மற்றும் நீதிமன்றத்தில் முறையான அனுமதி வாங்கி கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ