)
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரையின் போது கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தையே கண்ணீரில் ஆழ்த்திய கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் உள்ளது. இந்த சோகத்தை தாண்டி, தற்போது அந்த நிகழ்வை சுற்றி பல்வேறு வினோதமான சம்பவங்களும், அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளும் வெளிவர தொடங்கியுள்ளன. இது ஒரு நிர்வாக திறமையின்மையால் நடந்த விபத்தா அல்லது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஒரு திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

இந்த துயரத்தின் ஆணிவேராக இருப்பது கூட்டத்திற்கான அனுமதிக்கும், உண்மையான மக்கள் வருகைக்கும் இடையே உள்ள வித்தியாசம். தவெக சார்பில் 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், உண்மையில் அந்த இடத்திற்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதாக கூறப்படுகிறது. "இவ்வளவு பெரிய கூட்டத்தை கணிக்க, காவல்துறையின் உளவுத்துறை தவறியதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கூட்டத்திற்கு விஜய் காலை 11 மணிக்கே வந்துவிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் இரவு 7 மணிக்கு மேல்தான் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே வந்துள்ளார். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக, குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் வசதியின்றி, வெயிலில் காத்திருந்ததே இந்த நெரிசலுக்கும், உயிரிழப்பிற்கும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த அசாதாரண தாமதத்திற்கு காரணம் என்ன என்பது இதுவரை விளக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து, சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன. கூட்டம் அதிகமாக இருந்தபோது, மேடையை சுற்றியிருந்த Floodlights திடீரென அணைக்கப்பட்டதாகவும், அந்த இருட்டை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட குழு, நெரிசலை திட்டமிட்டு உருவாக்கியதாகவும் ஒரு குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. இது, கூட்டத்தில் இருந்தவர்களை பீதியடைய செய்து, தள்ளுமுள்ளு ஏற்பட வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்தேகங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக, கூட்ட நெரிசலில் சிக்கியதாக கூறப்படும் ஒரு பெண் பேசும் ஆடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதில், "கூட்டத்தை வேண்டுமென்றே பின்னால் இருந்து தள்ளினார்கள். இது தற்செயலாக நடந்தது போல் தெரியவில்லை," என்று அவர் கூறுவது இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் வலுக்க செய்துள்ளது.
நேரில் கண்ட சாட்சிகளின்படி, நெரிசலில் சிக்கி மக்கள் மயங்கி விழுந்தபோது, அவர்களை மீட்பதற்காக வந்த ஆம்புலன்ஸ்கள் கூட, கூட்டத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்துள்ளது. ஒரு அரசியல் கூட்டத்திற்கு தேவையான அடிப்படை அவசரகால வழிகள் கூட ஏற்படுத்தப்படாதது காவல்துறையின் மெத்தன போக்கை காட்டுவதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ