கீழடி வரலாறு, மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டு

Thangam Thennarasu : கீழடி வரலாற்றை மத்திய அரசு அங்கீகரிக்க மறுக்கிறது, அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்தாலும் ஏற்க மறுப்பது ஏன் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 22, 2025, 05:16 PM IST
  • கீழடி வரலாற்றை அங்கீகரிக்க மறுப்பது ஏன்?
  • தமிழின் தொன்மை அறிவியல் பூர்வமாக நிரூபணம்
  • மத்திய அரசுக்கு தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
கீழடி வரலாறு, மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டு

Thangam Thennarasu speech : சென்னை கோவிலம்பாக்கத்தில் மு.முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு செம்மொழி நாள் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் செம்மொழி போராளிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக  தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு செம்மொழி போராளிகளுக்கு சால்வை அணிவித்து மற்றும் பொற்கிழி வழங்கினார்கள்.

Add Zee News as a Preferred Source

அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தென்னரசு, தமிழை ஒருவர் செம்மொழி என்று சொன்னால் மட்டும் தான்  தமிழுக்கு சிறப்பா, இயற்கையிலே அம்மொழிக்கு சிறப்பு இல்லையா என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். தமிழ்மொழி  உயர்நிலை செம்மொழி தான்,ஆனால் அந்த மொழிக்கு நீங்கள் செம்மொழி என்று பெற்று தராவிட்டால் இன்று சோழிங்கநல்லூரில் செம்மொழி சாலை என்று வந்திருக்காது, அந்த சாலையில் செம்மொழி மத்திய தமிழ் ஆய்வு ஆராய்ச்சி நிறுவனம் இருக்காது. அப்படி ஒரு நிறுவனம் வந்திருக்காவிட்டால் தமிழுக்கான உரிய உயரிய ஆய்வுகளை நடத்துவதற்கு ஒன்றிய அரசு ஒரு பொழுதும் முன் வந்திருக்காது,

ஒன்றிய அரசு முன்வராமல் போயிருந்தால் தமிழுக்கு, தமிழ் அறிஞர்களுக்கு தலைவர் கலைஞர் தன்னுடைய பெயராலே கலைஞர் கருணாநிதி என்கின்ற அறக்கட்டளை பேராலே வழங்கக்கூடிய விருதுகளை பத்தாண்டுகள் மேலாக கடந்த ஆட்சியில்  முடக்கி போட்டார்கள். அதை மீட்டெடுத்த முதலமைச்சர் தமிழ் மொழி செம்மொழி விருதுகளை வழங்க வாய்ப்புகள் வந்திருக்காது. தமிழுக்காக போராடி ரத்தம் சிந்திய அவர்களுக்கு  விருது வழங்கும் நிகழ்ச்சியை நடந்திருக்காது, தமிழுக்கு இரண்டாம் நிலை குடிமக்களாக நாம் மட்டுமல்ல நம்முடைய மொழியும் இன்று ஆக்கிருப்பார்கள். 

கீழடியில் நம்முடைய அகழ்வாய்வு தளங்களில் தமிழ் மொழி  இருக்கக்கூடிய பெருமை தமிழ் மொழி 600 ஆண்டுகளுக்கு முன்பு  இருக்கக்கூடிய மொழி என்று சொன்னால் ஒன்றிய அரசு இன்று கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அதுக்கு காரணம் என்ன இந்திய ரூபாயிலே வடமொழிக்கு நிகரான ஒரு மொழி இல்லை. இந்தியாவில் இருக்கின்ற எல்லா மொழியும் வட மொழியில் வந்தது என்பதை கருத்தியலை நிறுவக்கூடிய கூட்டம் இன்றும் இருக்கின்றது, அதற்கு மாறாக தமிழ் என்கின்ற ஒரு மொழி இருக்கின்றது. அந்த மொழியினுடைய தொன்மை இன்று நேற்று அல்ல, உங்கள் மொழியெல்லாம் பிறந்து வருவதற்கு முன்பு அன்னைத் தமிழ் ஆயிரம் காலத்துப் பயிர்.

இரும்பின் தொழில்நுட்பத்தை கண்டெடுத்த தமிழ் பெருங்குடி மக்கள் மொழியின் தொன்மையை கண்டு தாங்கள் தமிழ் மொழியை எழுதிக் படிக்கக்கூடிய அந்த வரலாறு பெருமை கொள்ளக்கூடிய சமூகம் தமிழ் சமூகம் என்பதை அறிவியல் ரீதியிலே நிறைய ஒரே தலைவர் கலைஞர். இதை மூடி மறைப்பதற்காக ஒரு கூட்டம் அலைகிறது. ஆயிரம் கைகள் மறைத்து இருந்தாலும்,ஆதவனை மறைக்க முடியாது என்பது போல எத்தனை பேர் வந்தாலும் சரி தமிழுக்கு தலைவர் கலைஞர் இருக்கக் கூடிய தொண்டு செம்மொழியின் என்ற தகுதியை பெற்ற காரணத்தினால் தான் மைசூர் ஏதோ ஒரு கட்டிடத்தின் கீழ்  முடக்கி இருக்கக்கூடிய வாய்ப்பில்  இருந்த தமிழ் மொழி இன்றைக்கு  செம்மாந்த இடத்திலேயே உயர்ந்த கட்டிடத்தில் உட்கார வைத்து,

நீங்கள் விரும்புகின்றீர்களோ, விரும்பவில்லையோ இந்த மொழிக்கான ஆய்வுகளை செய்ய வேண்டும் என கலைஞர்  ராஜப்பாதையில் தான். இன்று அடுத்தடுத்து இருக்கக்கூடிய  ஒவ்வொரு மொழியும் எங்கள் மொழி செம்மொழியாக  தகுதி பெற வேண்டும் என்று அவர்களாக பெறுகின்றார்கள் என்று சொன்னால் அதற்குக் காரணம் கலைஞர். தமிழ் அறிஞர்களுக்கான ஓய்வூதியம் முதலமைச்சர் உயர்த்தி தந்துள்ளார், எல்லை போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் ஈடுபட்டவர்கள், மொழிப்போர் தியாகம் செய்திருக்கக் கூடியவர்கள் அத்தனை பேருக்கும் இந்தியாவில் ஒரு மாநில அரசு அங்கீகாரம்  செய்திருக்கின்றது என்று சொன்னால் தமிழக அரசு தான்.

இதை செய்யக்கூடிய காரணத்தினால் தான் இன்று நம் மீது எரிச்சல் படுகின்றார்கள் மொழியை கொச்சைப்படுத்துகின்றார்கள். என்ன பெருமை இருக்கின்றது கேட்கின்றார்கள்,என்ன வளம் இல்லை என்று கேட்டோம், அருமை இல்லை எங்கள் மொழிக்கு. ஒரு மொழியை நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை, ஆனால் எந்த ஒரு மொழியும் என்னுடைய மொழியை அழித்திவிட்டு நான் உயர்ந்த மொழி உருவாகும் என்று சொன்னால் அதற்கு உரிய பதிலடி எப்பொழுதும் அறிவியல் பூர்வமாக கொடுக்கக் கூடிய அரசாக தமிழ்நாடு அரசு இருக்கும் என தெரிவித்தார். 

மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதியவர்கள் விண்ணப்பிக்கும் முன் இந்த தவறை செய்துவிடாதீர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News