கிள்ளியூர் தேர்தல் முடிவுகள் 2026: காங்கிரஸ் மீண்டும் வெற்றி; தவெக 2வது இடம்
Killiyoor Election Result 2026: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் (Killiyoor) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் வெற்றிபெற்றார்.
கிள்ளியூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கிள்ளியூர், தமிழக சட்டமன்றத்தின் 234வது தொகுதியாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு எல்லையோரம் அமைந்துள்ள தொகுதி.
கிறிஸ்துவ நாடார்கள், கடலோர கிராமங்களில் அதிகம் வசிக்கும் கத்தோலிக்க மீனவ சமூகத்தினர் உள்ளிட்டோர் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். சமவெளிப் பகுதிகளில் பிள்ளைமார் சமூகத்தினர், இந்து நாடார்கள் கணிசமான அளவில் உள்ளனர். மலையாளி சமூகங்களான நாயர், ஈழவர் உள்ளிட்டோரும் கேரள எல்லையோரம் வசிக்கின்றனர்.
கிள்ளியூர் தொகுதி சட்டசபை தேர்தல் 2026 விவரங்கள்
2026ஆம் ஆண்டு தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்று முடிந்த நிலையில், 2026 மே 4 ஆம் தேதி (இன்று) கிள்ளியூர் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிள்ளியூர் வேட்பாளர்கள் பட்டியல் 2026
காங்கிரஸ் (INC): ராஜேஷ்குமார் (திமுக கூட்டணியில்) (தற்போதைய எம்எல்ஏ)
தமாகா (TMC): நிவின் சைமன் (அதிமுக கூட்டணியில் தாமரை சின்னம்)
நாம் தமிழர் கட்சி (NTK): ஹிம்லர்
தமிழக வெற்றி கழகம் (TVK): சுபின்
கிள்ளியூர் சட்டசபை தேர்தல் முடிவு 2026
வெற்றி: ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) - 66,434 வாக்குகள் (+1,311)
2ஆம் இடம்: சபின் (தவெக) - 53,369 வாக்குகள் (-1,311)
கிள்ளியூர் தொகுதி வாக்காளர் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள்: 1,23,798
பெண் வாக்காளர்கள்: 1,21,546
மூன்றாம் பாலினத்தவர்: 15
மொத்த வாக்காளர்கள்: 2,45,359
கிள்ளியூர் தொகுதி வாக்கு சதவீதம்
2026 தேர்தலில் இத்தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் சுமார் 71.26% ஆகும் (இது முந்தைய தேர்தலை விட 5% அதிகம்).
கிள்ளியூர் சட்டசபை தேர்தல் முடிவு 2021
வெற்றி: ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) - 1,01,541 வாக்குகள் (திமுக கூட்டணியில்)
இரண்டாம் இடம்: ஜூட் தேவ் (அதிமுக) - 46,141 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி: பீட்டர் - 14,571 வாக்குகள்
கிள்ளியூர் தொகுதி சட்டசபை தேர்தல் 2021 வாக்கு சதவீதம்
2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் 66.54% வாக்குகள் பதிவாகின.
கன்னியாகுமரி மாவட்டம் சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல்
கன்னியாகுமரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
நாகர்கோவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
குளச்சல் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
பத்மநாபபுரம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
விளவங்கோடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ