ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது !!

Last Updated : Jun 14, 2016, 01:10 PM IST
ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது !! title=

தக்காளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வரத்து குறைந்து வருவதால், சென்னையில் தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் தக்காளியி்ன் அளவு குறைந்ததால், சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் மாத இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனையானது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தக்காளி விளைச்சல் 30 சதவீதம் வரை குறைந்தது. இதனால் தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் கூறினர். 

Trending News