Koomappatti, Tamil Nadu government : தமிழ்நாட்டில் இப்போது உலகப் புகழ்பெற்ற கிராமமாக மாறிவிட்டது கூமாப்பட்டி. இன்ஸ்டாகிராமில் தங்கபாண்டி என்பவர் அண்மைக்காலமாக கூமாப்பட்டி குறித்து தொடர்ச்சியாக போட்ட வீடியோக்கள் எல்லாம் வைரலானது. இதனால் மொத்த சோஷியல் மீடியாவும் கூமாபட்டி குறித்து பேச, அந்த ஊருக்கு செல்ல வேண்டும் என பலரும் படையெடுக்க தொடங்கிவிட்டனர். இயற்கை எழில் கொஞ்சும் கூமாப்பட்டியில் இருக்கும் பெரியாறு அணைப் பகுதி சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். இந்த பகுதியில் பூங்கா கட்டுவதற்கு அரசு ஏற்கனவே திட்டமிட்டுவிட்டது. ஆனால், அதன் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதுகுறித்தும் இன்ஸ்டா பிரபலம் தங்கபாண்டி கூற, அதற்கும் இப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் போட்டிருக்கும் எக்ஸ் பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என கூறியுள்ளார். இதன்மூலம் கூமாபட்டிக்கு விரைவில் பூங்கா வர இருப்பது உறுதியாகியுள்ளது.
அதேநேரத்தில் இவ்வளவு நாட்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்து இப்போது பணிமாறுதல் பெற்றிருக்கும் ஜெயசீலசன் ஐஏஎஸ், கூமாபட்டி குறித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த பதிவும் வைரலாகியுள்ளது. விருதுநகர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் போட்ட அந்த பதிவில், " @ உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...
உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...
June 26, 2025
நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..
கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே!
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!
கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!" என கூறியுள்ளார். எது எப்படியோ கூமாபட்டி விரைவில் பொதுமக்கள் செல்லும் பிரபலமான சுற்றுலா தளமாக மாறப்போவது என்பது மட்டும் உறுதி.
மேலும் படிக்க | திருவண்ணாமலையில் கோவில் உண்டியலில் கிடந்த சொத்து பத்திரம் குறித்து விசாரணை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









