சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது காலி இடமாக உள்ளது. இங்கு இயங்கி வந்த பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ளூர் பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகின்றன. தனியார் பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பகுதியில் உள்ள அவர்களது பணிமனையில் இருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் இவ்வளவு பெரிய இடத்தை தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இந்த இடத்தை மக்களுக்கு பயன்படும்படி மாற்றுவார்களா என்ற எண்ணமும் பொதுமக்கள் மனதில் இருந்து வருகிறது.
மேலும் படிக்க | சட்டப்பேரவையில் அதிமுகவினர் சஸ்பெண்ட் - வெளியே இபிஎஸ்... உள்ளே செங்கோட்டையன்
சட்டப் பேரவையில் தமிழக அமைச்சர் சேகர் பாபு, கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசியுள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையம் குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது செயல்படும் என்றும், அதே வேளையில் மக்களின் நலனுக்காக இந்த இடத்தை எப்படி பயன்படுத்தலாம் என்ற புதுமையான வழிகளை அரசாங்கம் ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கிய பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையில் லுலு மால் என்ற மிகப்பெரிய வணிக வளாகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த செய்தி வெளியானதும் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பைத் தூண்டியது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கடுமையாக எதிர்த்து இருந்தார். "சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டை தமிழக அரசு என்ன செய்யப் போகிறது. இதுதான் தற்போது தமிழக அளவில் இருக்கும் பெரிய கேள்வியாக உள்ளது! கோயம்பேடு பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், மார்க்கெட் ஆகிய இடத்தை மொத்தமாக சேர்த்தால் கிட்டத்தட்ட 66.4 ஏக்கர் வரும். இதனை தனியாருக்கு ஒருபோதும் கொடுக்க முடியாது. அதனை மக்கள் பயன்பாட்டுக்கான பசுமைப் பூங்காவாக மாற்ற வேண்டும்" என்று அன்புமணி தெரிவித்து இருந்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் இடம் தொடர்பாக பலரும் பேசி வருவது அந்த இடத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம் 2002ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சாத்தியமான வணிக ஆதாயங்களை விட பொதுமக்களின் நலன்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இப்படி பல்வேறு விவாதங்கள் தொடரும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள 21 ஏக்கரின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.
மேலும் படிக்க | அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ED ரெய்டு! அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









