கூட்டு பாலியல் வன்கொடுமை: 8ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 3 ஆசிரியர்கள் - ஷாக் சம்பவம்

Krishnagiri Crime News: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அந்த மாணவியை கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 5, 2025, 04:46 PM IST
  • தாயார் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை.
  • 3 ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்தனர்.
  • 3 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு.
கூட்டு பாலியல் வன்கொடுமை: 8ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 3 ஆசிரியர்கள் -  ஷாக் சம்பவம்

Krishnagiri Crime News: கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை. உடனே இதுகுறித்து அறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார்.

Add Zee News as a Preferred Source

அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம் எதற்காக சிறுமி பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பாமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த தாயார் எனது மகள் கர்ப்பமாகியுள்ளார் என்றும் அதனால் அவருக்கு கருக் கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளோம் என கூறியிருக்கிறார்.

கிருஷ்ணகிரியில் கொடூரம்: மாணவியை கர்ப்பமாக்கிய 3 ஆசிரியர்கள்

தாயாரை சொல்லியதை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். மேலும், சிறுமியின் தாயார் கூறிய தகவலை கேட்டு அவர் திடுக்கிட்டார். இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான். 3 பேரும் சேர்ந்து தான் அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

மேலும் படிக்க | சென்னையை உலுக்கும் மற்றும் ஒரு பாலியல் சீண்டல்!

உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார். அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் கொடூரம்: 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாணவி பயின்ற அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (57), மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன்காரணமாக மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக பர்கூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் அனைத்து மகளிர் போலீசார், அரசு பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர்களை கண்டித்து சிறுமியின் உறவினர்கள் அரசுப்பள்ளியை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் மூன்று ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ், குற்றவாளிகளான மூன்று ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரியில் தொடரும் கொடூரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி என்சிசி பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியுள்ளாகியது. தற்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, அந்த பெண்ணை கர்ப்பமாக்கியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமை முயற்சி... தப்பிக்க மாடியில் இருந்து குதித்த பெண் - பகீர் கிளப்பும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News