)
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பல இடங்கள் கோரிக்கை பல இடங்களில் நின்று செல்லவேண்டும் தமிழ்நாட்டில் மட்டும் 38 ரயில் நிலையங்களில் இன்று செல்வதற்காக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி அறிவித்துள்ளார். இது நாளைலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் 2 ரயில்கள் ஆம்பூரில் நின்று செல்ல இருக்கிறது.
இந்த நிதி ஆண்டில் மட்டும் 6, 626 கோடி ரூபாய் ரயில்வே துறையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 800 கோடி ரூபாய் உலக தர வாய்ந்த விமான நிலையத்திற்கு நிகரான தரத்தில் மாற்றப்பட இருக்கிறது. 13 மாவட்டங்கள் இதன் மூலம் பயன்பெறும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய ஆதரவு அவரது சுற்றுப்பயணத்தில் கிடைக்கிறது. பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகிறார்கள் – இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் யாத்திரை அதை பார்த்து பயந்து ஒவ்வொரு நிமிடமும் ஸ்டாலின் உளறிக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் பட்டியல் இன மக்களுக்கு என்ன பொறுத்தவரை துரோகம் செய்து வருகிறார்.
இந்த 5 ஆண்டுகளில் திருமா எந்த இடத்திலும் பட்டியல் மக்களுக்காக வாய் திறந்தது கிடையாது. பட்டியலின மக்கள் மீது அக்கறை சிறிதும் அவருக்கு அக்கறை இல்லை. அவருக்கு திமுக கூட்டணியில் ஒட்டிக்கொள்ள வேண்டும். கூட்டணியில் இருந்து எம்எல்ஏ எம்பி ஆக வேண்டும் என்பது தான் அவரது குறிக்கோள். பட்டியலின மக்களுக்காக எல்லோரும் தான் குரல் கொடுக்கிறோம்.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறக்கூடிய கூட்டணி. திமுக கூட்டணி படுதோல்வி அடையப்போகிறது. தேர்தல் நேரத்தில் அந்த கட்சியிலிருந்து இந்த கட்சிக்கு போவது இந்த கட்சியில் இருந்து அந்த கட்சிக்கு போவது என்பது நடக்கும். ஆனால் தேர்தல் நேரத்தில் திமுகவிலிருந்து பாஜகவிற்கு நான் தலைவராக இருந்த பொழுது பலர் வந்திருக்கிறார்கள், இப்பவும் திமுகவிலிருந்து வெளியேற தயாராக இருக்கிறார்கள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். யார் என்று இப்போது சொல்ல முடியாது. சேரும்பொழுது உங்களுக்கு தெரிய வரும். திமுகவிலிருந்து பெரிய தலைவர்கள் எல்லாம் கூட எங்களுடன் பேசிய வருகிறார்கள் என எல். முருகன் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ