PM Internship Scheme : 10, 12, டிப்ளோமா, கல்லூரி முடித்தவர்களுக்கு இறுதி வாய்ப்பு - மார்ச் 31 கடைசி தேதி

PM Internship : பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 30, 2025, 08:44 AM IST
  • பிஎம் இன்டர்ஷிப் பயிற்சி திட்டம்
  • தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் அறிவிப்பு
  • மார்ச் 31 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
PM Internship Scheme : 10, 12, டிப்ளோமா, கல்லூரி முடித்தவர்களுக்கு இறுதி வாய்ப்பு - மார்ச் 31 கடைசி தேதி

PM Internship Scheme : பிரதமரின் இன்டர்ன்ஷிப் (PM Internship Scheme) என்பது பள்ளி, கல்லூரி முடித்த மாணவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சியை கொடுக்கும் ஒரு முன்மாதிரி திட்டமாகும். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில் பயிற்சிகள் மாத உதவித் தொகை மற்றும் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் உதவித் தொகை என இரண்டும் கொடுக்கபட்டு, பயிற்சியும் வழங்கப்படும். இந்த பயிற்சியின் முடிவில் தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டல்களும், மத்திய மாநில அரசுகளின் தொழில் கடன்கள் திட்டம், அதனை பெறுவது எப்படி என்ற வழிகாட்டல்களும் வழங்கப்படும். இப்படியான ஒரு அருமையான திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

Add Zee News as a Preferred Source

இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, : பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடந்த 12 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் வரும் 31 . ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் 09 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 44 இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் 10 -ம் வகுப்பு கல்வித் தகுதியில் 04 இளைஞர்களுக்கும், பிளஸ் 2 கல்வித் தகுதியில் 06 பேருக்கும் டிப்ளமோ கல்வித் தகுதியில் 04 பேருக்கும், பட்டப்படிப்பு முடித்த 15 இளைஞர்கள் மற்றும் ஐடிஐ பயிற்சி பெற்ற 15 இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

மேலும், இத்திட்டத்தில் 21 முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சிக்கு "pminternship.mca.gov.in" என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ரூ.6000/- ஒருமுறை வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், வெண்ணைய்மலை, கரூர் 639 006 ஆகிய இடங்களில் 31.03.2025 வரை அலுவலக வேலைநாட்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 04324 299422, 8248112815 மற்றும் 9566992442 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் இந்த திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும், இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News