Police Case Against Mr.World Body Builder Manikandan What Is The Truth : மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்றவரும், இன்ஸ்டா பிரபலமான மணிகண்டன் சொந்தமாக அம்பத்தூரில் தனியாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு மணிகண்டன் ஏற்கனவே கவிதா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சந்தியா என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் ஆணழகன் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். குறிப்பாக மணிகண்டன் ஜிம்மிற்கு வரும் பெண்களையும், இன்ஸ்டாகிராமிலும் உடலமைப்பை காட்டி மயக்கி பெண்களிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக சந்தியா குற்றம்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து சிறையில் இருந்த தனது கணவர் மணிகண்டனை கவிதா ஜாமீனில் எடுக்க லட்சக்கணக்கில் செலவழித்தும், கடிதம் மூலமாகவும் தனது அன்பை கவிதா வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் தனது மனைவி கவிதாவுடன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், மீண்டும் தனது லீலைகளை காண்பிக்க தொடங்கியுள்ளார் மணிகண்டன். சமீபத்தில் மனைவி கவிதா யூடியூப்பில் கணவர் மணிகண்டன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை பார்த்த போது தனது மனைவி என வேறொரு பெண்ணை மணிகண்டன் காண்பித்ததால் கவிதா அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக கவிதா கணவர் மணிகண்டனிடம் கேட்டப்போது மிரட்டியதால் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் மீது கவிதா புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. தொடர்ச்சியாக கணவர் மணிகண்டன் கவிதாவிடம் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கவிதா, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை காரணமாக தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை!
தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மனைவி கவிதா மணிகண்டன் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தன்னை விட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு மோசடி செய்ததாகவும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்தப் புகாரில் தன்னை காதலித்து மணிகண்டன் கடந்த 2019 ஆம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் கோயிலில் திருமணம் செய்ததாகவும் அதன் பிறகு தொடர்ந்து நெருங்கி பழகி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு வீட்டு பெற்றோர்களுக்கும் திருமணம் பற்றி தெரிய வந்து வெளிப்படையாக திருமண வாழ்க்கையை சேர்ந்து வாழ முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகார்..!
கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தியா என்ற சமூக சேவகி மணிகண்டன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்ததாக தெரிவித்துள்ளார். தான் கொடுத்த வரதட்சணை பணம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியே மணிகண்டன் சட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வெளியில் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காதலிக்கும் போதே தொடர்ந்து தனது உடற்பயிற்சி மையத்தில் சில பெண்களோடு நெருங்கி பழகி வந்ததாகவும், பலரும் மணிகண்டனை பற்றி குற்றம் சாட்டியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சிறைக்கு சென்று வந்த பிறகு தன்னிடம் மன்னிப்பு கேட்டு சில மாதங்கள் முறையாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் திடீரென போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தன்னை அடிக்க ஆரம்பித்ததாகவும், முறையாக உடற்பயிற்சி மையத்தை கவனிக்காததால் காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் .இதன் பின் தன் அம்மா வீட்டிற்கு வந்து மணிகண்டனை பிரிந்து வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். மீண்டும் தன்னோடு சேர்ந்து வாழுமாறு அடிக்கடி வீட்டிற்கு வந்து பேசிய மணிகண்டன் தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கும், பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பண மோசடி!
வேறொரு பணக்கார பெண்ணை மணிகண்டன் திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கு உண்டான கடனை அடைப்பதற்கு இந்த திருமணத்தை மேற்கொண்டதாகவும் சொல்லி மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோரிடம் கேட்கும் பொழுது பணக்கார பெண் என்பதால் மணிகண்டன் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் எனவே நீ செலவு செய்த பணத்தை புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண் கொடுக்கும், வரதட்சணை மூலம் கொடுத்து விடுவதாகவும் மேலும் வரதட்சணையாக தான் கொடுத்த நகை பணத்தையும் திருப்பித் தந்து விடுவதால் மணிகண்டன் வாழ்க்கையை விட்டு விலகுமாறு பெற்றோர்கள் மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
நானும் மணிகண்டன் திருமணம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் அழித்து ஏமாற்றி மோசடி செய்து இரண்டாவது திருமணம் செய்த மணிகண்டன் தனது அரசியல் நட்புகளை வைத்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தன்னை மிரட்டும் மணிகண்டன் மற்றும் அவரது பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வரதட்சணையாக தன்னிடம் வாங்கிய நகையை மீட்டுத் தருமாறு புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் சம்பந்தமாக மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | பாஜகவில் சேர போகும் அதிமுகவின் இரண்டு எம்எல்ஏக்கள் பெயரை சொன்ன உதயநிதி ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









