சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..கிறிஸ்தவ மத போதகர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு..

Pastor John Jebaraj Booked Under POCSO Case :  கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், கிறிஸ்தவ மத போதகர்  மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 7, 2025, 07:30 PM IST
  • மத போதகர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு..
  • மிகவும் பிரபலமானவர்
  • சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக புகார்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..கிறிஸ்தவ மத போதகர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு..

Pastor John Jebaraj Booked Under POCSO Case : கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ் (வயது 32). இவர் கேரளாவில் மத  போதகம் செய்து வந்து உள்ளார்.

Add Zee News as a Preferred Source

இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த விழாவின் போது, தனது மாமனாரால் தத்து எடுக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் அண்டை வீட்டுக்காரரான 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து உள்ளது. சிறுமிகள் வீட்டிற்கு வரும்போது எல்லாம் மத போதகர்  ஜான் ஜெபராஜ் பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள், பாதிரியாரின் தொடர் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர்.

இதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், கோவை மத்திய போலீசார் மதபோதகர்  ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கிறிஸ்தவ மத போதகர்  மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், கிறிஸ்தவ மத போதகர்  மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் என்ற சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் ஜெபராஜ் (வயது 32). இவர் கேரளாவில் மத  போதகம் செய்து வந்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த விழாவின் போது, தனது மாமனாரால் தத்து எடுக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் அண்டை வீட்டுக்காரரான 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து உள்ளது. சிறுமிகள் வீட்டிற்கு வரும்போது எல்லாம் மத போதகர்  ஜான் ஜெபராஜ் பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள், பாதிரியாரின் தொடர் தொல்லை குறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர்.

இதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், கோவை மத்திய போலீசார் மதபோதகர்  ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் அதிமுகவினர் சஸ்பெண்ட் - வெளியே இபிஎஸ்... உள்ளே செங்கோட்டையன்

மேலும் படிக்க | சீமான் நாளை ஆஜராகாவிட்டால்... டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் சொன்னது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News