)
Karur Stampede Issue Youtuber John Felix Arrest : கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
41 பேர் பலி!
கரூர் விஜய் பரப்புரையின் போது, பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது வரை 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 110 நபர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 51 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மேலும் 60 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இணையதள பிரபலங்கள் மீது நடவடிக்கை!
கரூர் விவகாரத்தில் பலர் அவதூறு கருத்துகளை இணையத்தில் பரப்புவதாக கூறப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து யூடியூபர்கள் சிலர் இதில் சிக்கியிருக்கின்றனர். குறிப்பாக, பிரபல யூடியூபர் ஃபெளிக்ஸ் இதில் சிக்கியிருக்கிறார். கரூர் சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டார்.
தவெக நிர்வாகிகள் கைது!
கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகரச் செயலாளர் பவுன்ராஜ் கைது - கரூர் நகர காவல் நிலத்திற்கு அழைத்து வந்து இரண்டு மணி நேர விசாரணைக்கு பிறகு மாவட்டகுற்றவியல் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி 15 நாள் போலீஸ் காவல் வைக்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வழக்கில் உள்ள முக்கிய நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல். பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவர் கைது.
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது.
தற்போது இருவரையும் கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து இரண்டு மணி நேரம் விசாரணை பிறகு கரூர் குற்றவியல் நீதிமன்ற 1 ல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினர் பின்னர் அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் இதனை எடுத்து இருவரையும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ