இளங்கோவன் மரண செய்தியில் சர்ச்சை! இறப்பிற்கு முன்னரே வெளியான இரங்கல் பதிவு..
Hazeena Syed Condolences For Elangovan Prior His Death : காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து, இவர் இறப்பதற்கு 1 மணி நேரம் முன்னரே ஒரு இரங்கல் பதிவானது வெளியாகியிருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Hazeena Syed Posts Condolences For Elangovan Prior His Death : காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, 75 வயதாகும் இவர், இன்று காலை 10:30 மணியளவில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினராக பதவியில் இருந்தவர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்ததை அடுத்து, மக்களவை உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். சுமார் 15 நாட்களுக்கும் மேலாக நுரையீரல் நோய் பாதிப்பு காரணமாக இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக நுரையீரல் சலி காரணமாக மூச்சுத்திணரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, இன்று காலை உயிரிழந்திருக்கிறார்.
மரண செய்தியில் சர்ச்சை!
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உயிரிழந்ததாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், தங்களது மெடிக்கல் ரிப்போர்டை 10:30 மணியளவில் வெளியிட்டது. ஆனால், மகிளா காங்கிரஸ் அணி தலைவர் ஹசீனா சையத், அந்த செய்தி வருவதற்கு 1 மணி நேரம் முன்பே இரங்கல் பதிவை வெளியிட்டிருக்கிறார்.